சென்னை : "சகி' மற்றும் "பெண்நலம்' அமைப்பு இணைந்து வழங்கும் திரைப்பட பின்னணி பாடகர் பாலசுப்ரமணியத்தின், "ஜில்லுனு ஒரு ஈவ்னிங்' என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கான நல்வாழ்வு அமைப்புகளான "சகி' மற்றும் "பெண் நலம்' ஆகிய இரண்டும் இணைந்து சென்னை, ராயப் பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்திய இந்த நிகழ்ச்சியில், திரைப்பட பின்னணி பாடகர் பாலசுப்ரமணியன், திரையிசை பாடல்களை பாடினார். மேஜிக் நிபுணர் வீராசேகரின் மேஜிக் நிகழ்ச்சியும் நடந்தது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், "பெண் நலம்' அமைப்பின் தலைவர் ராதிகா சந்தானகிருஷ்ணன், "சகி' அமைப்பின் நிறுவனர் சுமனா பிரேம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்."பெண் நலம்' அமைப்பிற்கு நன்கொடை தர விரும்புபவர்கள் 2464 2656, 2464 1481 மற்றும் 90944 95310 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE