சென்னை : உலக புற்றுநோயாளர் மறுவாழ்வு தினத்தையொட்டி, சென்னை அரசு பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை பிரிவின் சார்பில், புற்றுநோயால் பாதிக் கப்பட்டு மறுவாழ்வு பெற்றவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியில், மார்பக புற்றுநோய், எலும்பு புற்றுநோய்,மூளை புற்றுநோய், உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு பெற்ற 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இதுகுறித்து, சென்னை அரசு பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சந்திரமோகன் கூறியதாவது:புற்றுநோய் என்பது தொற்றுநோய் என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இன்றைய நவீன மருத்துவத்தில் எவ்வித புற்றுநோயையும் குணப்படுத்த முடியும் என்பதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கை முடிந்ததாக எண்ணக் கூடாது. நோயின் தன்மை அறியாமல், புற்று நோய்க்கு மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளக்கூடாது.இவ்வாறு சந்திரமோகன் கூறினார்.இந்நிகழ்ச்சியில், சென்னை அரசுப் பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வேணி, துணை கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE