சென்னை : ""ரயில்வேயின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வந்தது. ஐந்து ஆண்டுகளில் ரயில்வே 90 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்தது.தினசரி ஒரு கோடியே 80 லட்சம் பயணிகள், ரயிலில் பயணிக்கின்றனர். இரவும், பகலும் 9,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன,'' என்று ரயில்வே முன்னாள் இணை அமைச்சர் வேலு கூறினார்.சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், ரயில்வே முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு, "இந்திய ரயில்வேயில் ஏற்பட்ட மாற்றங்கள்' என்ற தலைப்பில் பேசினார்.அவர் பேசியதாவது:சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, சவால்களை சந்திக்கிற வகையில் தன்னம்பிக்கையை வழங் கியது. கட்சித் தலைவராலும், நண்பர்களாலும் அரசியலுக்கு தள்ளப் பட்டேன். "என் மனைவி அரசியலுக்கு செல்ல வேண்டாம்' என்றார். எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்று, ரயில்வே இணை அமைச்சரானேன். நான் பொறுப்பேற்கும் போது ரயில்வே நஷ்டத் தில் இயங்கியது.
ரயில்வேயின் செயல் பாட்டை ஆய்வு செய்த கமிட்டி, இன்னும் 10 ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் திவாலாகிவிடும் எனக் கூறியது. அந்த சமயத்தில் நான் ரயில்வே இணையமைச்சராக பொறுப்பேற்றேன். ரயில்வேயில் சரக்கு ரயில்கள் மூன்றில் இரண்டு பங்கும், பயணிகள் ரயில் ஒரு பங்கும் உள்ளது.
சரக்கு ரயிலில் ஒவ்வொரு பெட்டியும் எடுத்துச் செல்லும் எடை அளவு எட்டு டன் அதிகரித் ததன் மூலம் ரயில்வேக்கு கூடுதல் லாபம் கிடைத் தது. பயணிகள் ரயிலை முறைப்படுத்தி, இயக்கியதன் மூலம் லாபம் அதிகரித்தது.பயணிகளின் ரயில் பெட்டிகளின் எண்ணிக் கையை இருபத்து நான்காக அதிகரித்தோம். ரயில்கள் நிற்பதற்கு வசதியாக, பிளாட்பாரத்தின் நீளத்தை போர்க்கால அடிப்படையில் அதிகரித்தோம்.அனைத்து ரயில் பெட்டிகளும் காலி இல்லாமல் இயங்கும் வகையில் உருவாக்கினோம். இதனால், ரயில்வேயின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே 90 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.விபத்துகளின் எண்ணிக் கையும் குறைந்தது. தினசரி ஒரு கோடியே 80 லட்சம் பயணிகள், ரயிலில் பயணிக்கின்றனர். இரவும், பகலும் 9,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.தேர்தலில் முதலில் ஓட்டளிக்கும்போது, முதல்கட்டமாக தியாகத் திற்காக ஓட்டளித்தனர். இரண்டாவது கட்டத்தில் நல்ல பணிக்காகவும், சாதனைக்காகவும் ஓட்டளித் தனர்.மூன்றாம் கட்டத்தில் கூட்டணிக்காக ஓட்டளித்தனர். தற்போது நான்காவது கட்டத்தில் தியாகம், நல்ல பணி மற்றும் கூட்டணிக்காக மக்கள் ஓட்டளிப்பதில்லை.
இவ்வாறு வேலு பேசினார்.சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் பேசும் போது,""சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் 175ம் ஆண்டு விழா, 2012ம் ஆண்டு கொண்டாடப் படும்,'' என்றார்.முன்னாள் மாணவர் முரளி பேசும்போது, "சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் உள்ள ஹீபர் அரங்கில் உள்ள மின் விளக்குகளுக்கு பதிலாக, எல்.இ.டி., விளக்கு பொருத்தி மின்சாரத்தை சேமிப்பதுடன், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.இத்திட்டத்தால் ஹீபர் அரங்கில் ஆண்டுதோறும் ஏற்பட்ட மின்சார செலவு 6.2 லட்சம் ரூபாயிலிருந்து 1.2 லட்சம் ரூபாயாகக் குறையும்' என்றார்.முன்னாள் மாணவர் சங்க தலைவர் ரவி தாமஸ், செயலர் செரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE