எம்.எல்.ஏ.,வின் எகத்தாளம்... எலக்ஷனுக்கு போடுறாரு தப்புத்தாளம்!| Dinamalar

எம்.எல்.ஏ.,வின் எகத்தாளம்... எலக்ஷனுக்கு போடுறாரு தப்புத்தாளம்!

Added : நவ 19, 2015
Share
குளிர் காற்றும், தூரலும், 'ஹெல்மெட்'டைத் தாண்டி, முகத்தை 'சில்'லிட வைக்க...பொருட்படுத்தாமல், வேகமாக வண்டியை ஓட்டினாள் மித்ரா. பின் சீட்டில் சித்ரா. டி.பி.,ரோட்டில், பழமையான பேக்கரி முன், வண்டியை நிறுத்திய மித்ரா, 'சூடா ஒரு டீ குடிக்கணும் போல இருக்குக்கா' என்றாள். இருவரும், உள்ளே நுழைந்து, தனி டேபிள் பிடித்து, 'கட்லெட்', 'டீ'க்கு ஆர்டர் கொடுத்தனர்.''என்ன மித்து...
எம்.எல்.ஏ.,வின்  எகத்தாளம்... எலக்ஷனுக்கு  போடுறாரு தப்புத்தாளம்!

குளிர் காற்றும், தூரலும், 'ஹெல்மெட்'டைத் தாண்டி, முகத்தை 'சில்'லிட வைக்க...பொருட்படுத்தாமல், வேகமாக வண்டியை ஓட்டினாள் மித்ரா. பின் சீட்டில் சித்ரா. டி.பி.,ரோட்டில், பழமையான பேக்கரி முன், வண்டியை நிறுத்திய மித்ரா, 'சூடா ஒரு டீ குடிக்கணும் போல இருக்குக்கா' என்றாள். இருவரும், உள்ளே நுழைந்து, தனி டேபிள் பிடித்து, 'கட்லெட்', 'டீ'க்கு ஆர்டர் கொடுத்தனர்.
''என்ன மித்து... சிட்டிக்குள்ள ரோடெல்லாம் படு மோசமா இருக்கு. டூவீலரே ஓட்ட முடியாது போலிருக்கே'' என்று ஆவேசமாய் ஆரம்பித்தாள் சித்ரா.
''ஆமாக்கா...இன்னும் அஞ்சாறு மாசத்துல எலக்ஷனை வச்சிட்டு, ஊரை இப்பிடி வச்சிருக்காங்க. எப்பிடியும் காசாலயே ஜெயிச்சிருவோம்கிற தைரியமா?'' என்றாள் மித்ரா.
''தெரியலை. ஆனா, நாலு வருஷமா விட்டுப்போட்டு, இப்பதான் பாலம், ரோடு வேலையெல்லாம் வேகப்படுத்துறாங்க. காந்திபுரம் பாலம் 'ஒர்க்' செம்ம ஸ்பீடா போகுது. அநேகமா, பொங்கலுக்கு அப்புறம் திறந்திருவாங்க போலிருக்கு''
''நடந்தா நல்லது தான். ஆனா, எந்த எம்.எல்.ஏ.,வும், தங்களோட தொகுதியில, புதுசா பாலம் கட்டணும், ரோடு போடணும்னு எந்த முயற்சியும் பண்ணவே இல்லியே. யாரு பதவியை எப்பிடிக் காலி பண்ணலாம்கிறதுல தான் பொழுதை ஓட்றாங்க''
''அதென்னவோ உண்மை தான் மித்து... சிட்டியில இருக்கிற எம்.எல்.ஏ., ஒருத்தரு, வார்டுக்கு நிதி கேட்டுப் போன ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தர்ட்ட, 'ஏம்மா, ஜனங்க எனக்கும், உனக்குமா ஓட்டுப் போட்டாங்க. அம்மாவுக்கு தான போட்டாங்க. மறுபடியும் போடுவாங்கன்னு 'சேலஞ்ச்' விட்டாராம்'' என்றாள் சித்ரா.
''மத்த ஏரியா எப்பிடியோ... சிட்டிக்குள்ள சில ஏரியாக்கள்ல, பழைய எம்.எல்.ஏ.,க்கள் கால் வக்கிறதே கஷ்டம் தான். பார்த்தேல்ல... கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ள சாக்கடையக் கொட்டி, ஐ.டி., இன்ஜினியர்கள் கொந்தளிச்சு, உள்ள போனதை. பேஸ்புக்லயும், டிவிட்டர்லயும் 'கமென்ட்' போடுற இவுங்களே இப்பிடிக் கொதிச்சா, சாதாரண ஜனங்க என்ன பண்ணுவாங்க?'' என்றாள் மித்ரா.
''ஆனா, இந்த ஐ.டி.,காரங்க பாவம்க்கா. ஏதோ வேகத்துல பண்ணிட்டு, இப்பிடி ஜெயிலுக்குப் போயிட்டாங்களே'' என்றாள் சித்ரா.
''இல்லை மித்து... முதல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த கார்ப்பரேஷன் ஆபீசர்ங்க, அப்புறமா 'காம்ப்ரமைஸ்' பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''யாராவது வேணாம்னு தடுத்துட்டாங்களா?''
''அதில்லை... ஸ்டேஷன்ல உட்கார்ந்திருக்கிறப்போ, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பேசுறதெல்லாம், 'ஸ்மார்ட் போன்'ல 'வீடியோ' எடுத்திருக்காங்க, அந்தப்பசங்க. அப்புறம்தான், போலீசே கொதிச்சுப் போயி, தாறுமாறா பல செக்ஷன்ல கேசைப் போட்ருக்காங்க''
''கேசு போடுறதுல நம்ம போலீஸ்களைப் பத்திக் கேக்கணுமா...மதுக்கரையில இருக்கிற எஸ்.ஐ., ஒருத்தரு, ஒரு தோட்டத்துல 9 சண்டைச் சேவல்களைப் பிடிச்சு, சூதாட்டக் கேசு போட்ருக்காரு. அருமையா 'ப்ளான்' பண்ணி, 6 சேவலை வித்துட்டாரு. ரெண்டை மட்டும், கோர்ட்ல காமிச்சிருக்காரு...!''
''மீதி ஒண்ணு என்னாச்சு?''
''சொல்லுவேன்ல...பறக்குற...அதைக் கறிக்கொழம்பு வச்சு, ஸ்டேஷன்ல இருக்கிற சில பேருக்கு 'விருந்து' படைச்சிட்டாராம்'' என்றாள் சித்ரா.
''அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், ஓரளவுக்கு நல்லவர்னு கேள்விப்பட்ருக்கனே...அங்கயா இப்பிடி?'' என்றாள் மித்ரா.
''ஆனா, அவரையும் மீறி, அங்க ஏகப்பட்ட வேலை நடக்குது. மகளிர் சுய உதவிக் குழுவுக்கு, கையில உடைச்சு கல்லு எடுக்குறதுக்கு கல்குவாரி பர்மிட் கொடுத்திருக்காங்க. அங்க கேரளா ஆளுங்க மெஷின் வச்சு, கல்லு உடைச்சு, கேரளாவுக்கு லோடு லோடா கல்லு கடத்துறாங்க. இந்த இன்ஸ்பெக்டர் அந்த ரோட்டை மறிக்க முயற்சி பண்ணியும், முடியலை'' என்றாள் சித்ரா.
''அப்பிடின்னா, அவரை விட பெரிய ஆபீசருங்க கை இருக்குன்னு சொல்லு'' என்றாள் மித்ரா.
''போலீஸ் ஆபீசர்க்கு மட்டுமில்லை. மைன்ஸ் ஆபீசர், தாசில்தாரு, விஏஓன்னு ஏகப்பட்ட ஆளுங்களுக்கு லட்சம் லட்சமா லஞ்சம் போகுது. கலெக்டர்க்கு 'கம்ப்ளைன்ட்' போயும், அவுங்களும் கண்டுக்கலையாம்''என்றாள் சித்ரா.
''பிரச்னைக்குரிய எந்த மேட்டர்லயும் தலையிடக்கூடாதுன்னு திட்ட வட்டமா இருக்காங்க போலிருக்கு. ஆனா, எலக்ஷன் வரைக்கும் இங்க இருந்துக்கிறதுக்கு 'ஸ்பெஷல் பர்மிஷன்' வாங்கிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.
சுடச்சுட கட்லெட், மசாலா டீ வந்தது. இரண்டையும் சுவைத்துக் கொண்டே, பேசினாள் சித்ரா.
''மித்து... வழக்கமா, கவர்மென்ட் டிபார்ட்மென்ட் டிரைவர்களுக்கு நாலு வருஷத்துக்கு ஒரு தடவை தான், டிரான்ஸ்பர் போடுவாங்க. ஆனா, இப்போ வருஷத்துல நாலு டிரான்ஸ்பர் போடுறாங்களாம். விசாரிச்சா, 'அபிஷியல் சீக்ரெட்' எல்லாம் வெளிய போகக்கூடாதுன்னு இப்பிடிப் பண்றதா சொல்றாங்க''
''என்ன பெரிய சீக்ரெட்....தீபாவளிக்கு, எந்தெந்த ஆபீஸ்ல எவ்ளோ கலெக்ஷன்னு இப்ப வரைக்கும் நியூஸ் வந்துட்டே தான் இருக்கு. கார்ப்பரேஷன்ல இந்த வருஷம், நாலு பேருக்கு ஒரே மாதிரி, பெரிய தொகையா அன்பளிப்பு கொடுக்க வேண்டியதாயிருச்சுன்னு ஏ.சி., இ.இ., ஏ.இ.இ., எல்லாரும் புலம்புறாங்க'' என்றாள் மித்ரா.
''அவுங்க கொடுக்கிறதுக்கென்ன...கொஞ்சமாவா சம்பாதிக்கிறாங்க?''
''அது சரி...ஆனா, ஒவ்வொருத்தருக்கும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் கேட்டா...என்ன பண்ணுவாங்க? அதுலயும் சென்னையில இருந்து இங்க மாறி வந்திருக்கிற 'படா' இன்ஜினியரு, 'பெரிய ஆபீசர்க்கு 'ஈக்வலா' எனக்கும் கொடுக்கணும்'னு ராஜ கம்பீரமா கேட்டு வாங்குனாராம். இதியெல்லாம் திரும்ப எடுக்கணும்னா, ரோடு போட முடியாது. பேப்பர்ல வெறும் கோடு போட்டு தான் காசடிக்கணும்''
''இப்பவே பல வேலைங்க அப்பிடித்தான நடக்குது...கலெக்டராபீஸ்ல திட்டம் போடுற ஆபீசர், பல கிராமங்களுக்கு பாலம், ரோடு போடுற பணத்துல தான், தன்னோட 'செகண்ட் பேமிலி'க்கு, புதுசா டாடா காரு வாங்கிக் கொடுத்திருக்காராம்'' என்றாள் மித்ரா.
''பேரைக் காப்பாத்திக்கிறாரு போலிருக்கு. அதென்னவோ தெரியலை...இதே 'போஸ்ட்டிங்'ல இங்க இருந்த ஒருத்தரு, இதே போல இன்னொரு ஆபீசரை, ரெண்டாவது 'பேமிலி'யாக்கி, அப்புறம் ஊழல் கேசுல மாட்டி, கடைசியில 'டிஸ்மிஸ்' ஆனாரு. அது அந்த 'சீட்'டோட ராசியோ என்னவோ?'' என்றாள் சித்ரா.
''இதுல என்ன ராசி இருக்கு...ஊரை ஏமாத்தி, ஊழல் பண்ணுன காசை வச்சிட்டு ஆடுற எல்லாருக்கும் இதே கதி தான்!'' என்றாள் மித்ரா.
''சரி...அதை விடு...புது கமிஷனர், ஸ்டேஷன்களுக்கு திடீர் 'விசிட்' வர்றதா கேள்விப்பட்டேன். உண்மையா?''
''ஆமாக்கா...காட்டூர், செல்வபுரம், ராமநாதபுரம்னு 3 ஸ்டேஷன்க்குப் போயிருக்காரு. ஆனா, யாரும் சிக்கலை. வண்டியில ஏறுற வரைக்கும், எந்த ஸ்டேஷன்னு டிரைவர்ட்ட சொல்றதில்லையாம். ஏறிட்டுச் சொல்றதால, அவரு எப்போ, எங்க வருவார்னு தெரியாம, எல்லா ஸ்டேஷன்லயும் ஆடிப் போயிருக்காங்க''
''இதே மாதிரி, நைட் ரவுண்ட்ஸ் வந்தார்னா நல்லாருக்கும். ரேஸ் விடுற பசங்க, அந்த தொழில் பண்றவுங்க, லாட்ரி, கஞ்சா குரூப் எல்லாத்தையும் தூக்குனா, ரொம்ப நல்லாருக்கும். கட்டப்பஞ்சாயத்து பண்ணி, சொத்துக்களை சுருட்டுற இன்ஸ்பெக்டர்களை, இந்த ஊர்லயிருந்து துரத்துனா, இன்னும் சூப்பராயிருக்கும்'' என்றாள் சித்ரா.
''இவராவது, 'ஃபீல்ட் விசிட்' கிளம்பிட்டாருக்கா... ஆனா, கார்ப்பரேஷன்ல இருக்கிற எந்த ஆபீசரும், 'ஃபீல்ட் விசிட்' போறதேயில்லை. வசூல்ன்னா மட்டும், வேகமா வேலை பாக்குறாங்க. கீழ இருக்கிறவுங்க, அப்புறம் எப்பிடி வேலை பார்ப்பாங்க?'' என்று கொதித்தாள் மித்ரா.
''வசூல்னதும் தீபாவளிக்கு ஸ்டேஷன்ல நடந்த வசூல் ஞாபகம் வந்துச்சு. துடியலுார்ல இருக்குற இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ரெண்டு பேரு ஒரு டீமாவும், போலீஸ்காரங்க ஒரு டீமாவும் பிரிஞ்சு, 'யாரு அதிகம் வசூல் பண்றதுன்னு பார்ப்போம்'னு பேசிக்கிட்டு, இறங்குனாங்களாம். கடைசியில, இருவர் அணி தான் ஜெயிச்சுச்சாம்'' என்றாள் சித்ரா.
''ஏன்க்கா...நம்மூருக்கு யோகா கத்துக்க வந்தாரே, கேப்டன். ஏர்போர்ட்ல, சில 'டிவி' ரிப்போர்ட்டர்களை காய்ச்சி எடுத்துட்டாராமே. கேள்விப்பட்டியா?'' என்றாள் மித்ரா.
''அவரு இங்க வந்து யோகா கத்துக்கிட்டாரா, சண்டை கத்துக்கிட்டாரான்னு தெரியலை... ஆனா, இங்கயிருந்து போன பிறகு தான், எம்.எல்.ஏ., சிவக்கொழுந்த மறுபடியும் போட்டுத் தாக்கீருக்காரு'' என்று சிரித்தாள் சித்ரா.
பில் வந்தது. ஹேண்ட்பேக்கை சித்ரா எடுக்க, பில்லை எடுத்துக் கொண்டு கல்லாவை நோக்கி ஓடினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X