தாரை வார்க்கப்படும் சொத்து தூங்கி வழியும் அதிகாரிகள்!

Added : நவ 19, 2015
Share
Advertisement
அன்றைய தினம் காலைப்பொழுது, லேசான மழை தூறல். குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் சித்ராவும், மித்ராவும் காலாற நடந்து, ஆண்டிபாளையம் குளத்தை சுற்றிப்பார்த்தனர்.""என்ன மித்து, குளம் எப்படி இருக்கு,'' என, மகிழ்ச்சி பொங்க சித்ரா கேட்க, ""பொதுமக்களின் கரசேவையுடன் உருவான குளமாச்சே. சூப்பரா இருக்கு. பூங்கா அமைக்கும் பணியையும் விரைவா முடிச்சிட்டாங்கன்னா, மக்கள்
தாரை வார்க்கப்படும் சொத்து தூங்கி வழியும் அதிகாரிகள்!

அன்றைய தினம் காலைப்பொழுது, லேசான மழை தூறல். குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் சித்ராவும், மித்ராவும் காலாற நடந்து, ஆண்டிபாளையம் குளத்தை சுற்றிப்பார்த்தனர்.
""என்ன மித்து, குளம் எப்படி இருக்கு,'' என, மகிழ்ச்சி பொங்க சித்ரா கேட்க, ""பொதுமக்களின் கரசேவையுடன் உருவான குளமாச்சே. சூப்பரா இருக்கு. பூங்கா அமைக்கும் பணியையும் விரைவா முடிச்சிட்டாங்கன்னா, மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிப்பாங்கன்னு நெனைக்கிறேன்,'' என்றாள் மித்ரா.
""சொந்த செலவுல பாலம் கட்டப்போறேன் கம்யூ., கட்சிக்காரர் சொன்னதால, ஆளுங்கட்சிக்காரங்களும் கை கோர்த்துட்டாங்களாமே,'' என, அரசியல் மேட்டருக்குள் நுழைந்தாள் சித்ரா.
எதுவும் புரியாமல், முழித்தாள் மித்ரா.
""மங்கலம் ரோடு பாரப்பாளையத் தையும், ராயபுரத்தையும் இணைக்கற மாதிரி, நொய்யல் ஆத்துக்கு குறுக்கே பாலம் கட்டப் போறாங்களே, அதைத்தான் சொல்ல வர்றேன். தன்னிறைவு திட்டத்துல, பாலம் கட்டலாம்னு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. கடைசியில்,
"நிதி இல்லை'னு அதிகாரிங்க கையை விரிச்சுட்டாங்க.
"அப்செட்' ஆன, கம்யூ., கவுன்சிலர், "சொந்த செலவுல, சின்னதா தரைப்பாலம் கட்டப்போறேன்'னு, சொல்லியிருக்கார். இதை கேள்விப்பட்டதும், தேர்தல் நேரத்துல, ஓட்டு வங்கி சிதைஞ்சிட கூடாதேன்னு, ஆளும்கட்சியும் களமிறங்கிடுச்சு. எல்லோரும் சேர்ந்து பாலம் கட்டி, மாநகராட்சி மூலமா ரோடு போட ஏற்பாடு செஞ்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""ஆளுங்கட்சிக்காரங்களும் தொடர்ச்சியா, சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப் போறாங்களாமே,'' என, கேட்டாள் மித்ரா.
""ஆமாம்பா, திருப்பூருக்கு ஸ்டாலின் வந்துட்டு போனதுல இருந்து, ஆளுங்கட்சிக்காரங்க கலக்கத்திலேயே இருக்காங்க போலிருக்கு. பல்லடத்துல கூட்டம் போட்டாங்க. வர்ற, 23ல் ஓ.பி.எஸ்., கலந்துக்கிற கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. ஒரு நாள் விட்டு, நாஞ்சில் சம்பத் தலைமையில் பட்டிமன்றமும் நடக்கப் போகுது,'' என்றாள் சித்ரா.
""என்னக்கா, பயந்துட்டாங்களா,'' என, மித்ரா கேட்க, ""ஸ்டாலின் பிரசாரத்தால, கோட்டையில் ஓட்டை விழுந்திடக்கூடாதுன்னு கவனமாக இருக்காங்க,'' என, வக்காலத்து வாங்கினாள் சித்ரா.
""அதெல்லாம் சரிக்கா, பனியன் கம்பெனியில் ஒரு கோடி ரூபாயை "லவட்டி'ட்டு போனவங்களை, ரெண்டே நாள்ல, நம்ம போலீஸ் "அரெஸ்ட்' பண்ணிடுச்சு பார்த்தீங்களா,'' என, மித்ரா வியந்தாள்.
""சிசி "டிவி' கேமரா பதிவு உதவியோடு கைது செஞ்சிருக்காங்க. முதல்ல, ரூ.1.42 கோடி திருடு போச்சுன்னு சொன்னாங்க; அப்புறம், ரூ.1.05 கோடின்னு சொன்னாங்க. கைது செய்தவர்களிடம், 94 லட்சம்தான் பறிமுதல் செஞ்சிருக்காங்க. மிச்ச பணமெல்லாம், ரெண்டே நாள்ல எங்க போச்சுன்னு தெரியலை,'' என்றாள் சித்ரா.
""இந்த வழக்குல இன்னும் தீவிரமா விசாரிக்கணும்னு நெனைக்கிறேன். திருடனுக்கு பக்கபலமா இருந்தது யார்? இவ்ளோ பணம், பனியன் கம்பெனியில் ரொக்கமா இருக்கற விஷயம், எப்படித் தெரியும். அவ்ளோ பணத்தை எடுத்துக்கிட்டு எப்படி தப்பிச்சு போனாருன்னு ஏகப்பட்ட கேள்வி வருது. போலீஸ்காரங்க இன்னும் தீவிரமா விசாரிச்சாங்கன்னா, பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்னு நெனைக்கிறேன்,'' என, சூட்டை கிளப்பினாள் மித்ரா.
""கோவில் சொத்தையே, நம்மூர்ல தனியாருக்கு நூதனமாக மாத்தி விடுறாங்களாமே,'' என, கேட்டாள் சித்ரா.
""அதுவாக்கா, ""நம்மூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல, கோவில் நிலத்தை மீட்டு, "போர்டு' வச்சாங்க; கோர்ட்டுல வழக்கு நடந்துச்சு. புதுசா வந்திருக்கிற அதிகாரி கண்டுக்காம விட்டுட்டாரு; வழக்குல, அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்துருச்சு. புதுசா "ஷாப்பிங் மால்' கட்டியிருக்கிற இடமும் கோவிலுக்கு சொந்தமானது. "ஷாப்பிங் மால்' ஏலத்துக்கு வருதுன்னு வங்கி தரப்புல "போர்டு' வச்சிருக்காங்க. சம்பந்தப்பட்டவங்களே, "பினாமி' பேர்ல ஏலம் எடுத்து, சொந்தமாக்குறதுக்கான முயற்சி நடந்துக்கிட்டு,'' என்றாள் மித்ரா.
தூறல் பலமாக விழ ஆரம்பித்ததால், இருவரும் வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X