பயங்கரவாத அமைப்புகளுக்கு, நிதி கிடைப்பதை தடுக்கும் வகையில், சர்வதேச அளவில், எப்.ஏ.டி.இ., எனப்படும், நிதி நடவடிக்கை பிரிவு இயங்கி வருகிறது; இதில், இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், எப்.ஏ.டி.இ., வெளியிட்டுள்ள அறிக்கை: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கும் நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசு, இதுதொடர்பாக, 37 பேருக்கு சொந்தமான, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இந்த, 37 பேரும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.