சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.எஸ்., அமைப்பில் தமிழக வாலிபர்கள்

Added : நவ 22, 2015
Advertisement

சென்னை,: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், தமிழக வாலிபர்கள் சேர முயன்ற விவகாரம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன், இந்தியாவைச் சேர்ந்த, 150 பேர் நேரடி தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் கரூரைச் சேர்ந்த, இரண்டு வாலிபர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர, துருக்கி வரை சென்று பிடிபட்டுள்ளனர்.இதுகுறித்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த பி.காம்., பட்டதாரியும், சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த, கரூரைச் சேர்ந்த அவனது நண்பனும் ஐ.எஸ்., அமைப்பில் சேர முயன்று, துருக்கியில் பிடிபட்டு, நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாலிபர்களின் குடும்ப பின்னணி, நண்பர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம்.
மேலும், ஐ.எஸ்., அமைப்புக்கு, தமிழகத்தில் ஆள் பிடிக்கும் ஏஜன்ட்கள் உள்ளனரா; வாலிபர்கள் துருக்கி வரை செல்ல பண உதவி செய்தது யார்; விசா பெற்றுத் தந்தோருக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக விசாரணை நடக்கிறது.இவ்வாறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X