ஜிம்பாப்வேயில் நடைபெற்ற மிகவும் அசிங்கமானவர் போட்டி

Added : நவ 23, 2015 | கருத்துகள் (1)
Advertisement

ஹராரே:தென் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் நடைபெற்ற, 'மிகவும் அசிங்கமான நபர்' போட்டியில், இரண்டு ஆண்டுகளாக அந்த பட்டத்தை தக்க வைத்திருந்தவரை, தன், 'அழகால்' வீழ்த்தி, பட்டத்தை வென்றார் மைசன் செரெ, 42, என்பவர்.
வழக்கமாக, அழகிப் போட்டிகளையும், ஆணழகர்கள் போட்டியையும் பார்த்து ரசித்துள்ளவர்களுக்கு, ஜிம்பாப்வே நாட்டில் நடத்தப்பட்ட அசிங்கமான நபர் போட்டி மிகவும் வித்தியாசமாக இருந்தது. 'பார்த்தவுடன் அந்த நபரை வெறுக்கும் அளவுக்கும்; கண்களை மூடிக் கொள்ளும் அளவுக்கும் அவர் இருக்க வேண்டும்' என்பது தான், போட்டியின் முக்கிய விதி.கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டியில், இரண்டு ஆண்டுகளாக அந்த பட்டத்தை தக்க வைத்திருந்தவர், வில்லியம் மஸ்வினு, 45. இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற, இந்த ஆண்டுக்கான, அசிங்கமான நபர் போட்டியில், மஸ்வினுவை வீழ்த்திவிட்டார் மைசன் செரெ.
மஸ்வினுவும், அவரின் ஆதரவாளர்களும், பட்டம் தங்கள் கைகளை விட்டு போவதை அனுமதிக்காமல், நடுவர்களிடம் கடைசி வரை போராடினர். 'என்னைப் பார்த்தாலே அசிங்கமாக இருக்கும். ஆனால், மைசன் செரெ, பார்ப்பதற்கு அழகாக உள்ளான்; வாயைத் திறந்து சிரித்தால் தான் அசிங்கமாக இருப்பான்; எனவே, எனக்குத் தான் பட்டம் வேண்டும்' என, மஸ்வினு மன்றாடினார்.
எனினும், போட்டியாளர்கள், 'சிரித்த படி, சிரிக்காமல் என, எப்படிப் பார்த்தாலும், மைசன் செரெ தான் அசிங்கமாக இருக்கிறார். எனவே, அவருக்குத் தான் பட்டம்' என்றனர். இதையடுத்து, ரகளையில் ஈடுபட்ட மஸ்வினு ஆதரவாளர்கள், 'போட்டியில் முறைகேடு நடந்துள்ளது; எங்கள் ஆள் தான், மிகவும் அசிங்கமான ஆள்; அதனால் தான், இரண்டாண்டுகளாக அவர் இந்தப் போட்டியில் வென்று வந்தார்' என, கூச்சலிட்டனர்.
எனினும், மிகவும் அசிங்கமான நபருக்கான பட்டம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மைசனே பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
malar - chennai,இந்தியா
24-நவ-201511:05:00 IST Report Abuse
malar பூ இதென்ன piramaatham எங்க நாட்டிலே இந்த போட்டி நடந்தா போட்டி கடும் போட்டியாக இருந்திருக்கும் நடுவர்கள் திணறி இருப்பாங்க இல்ல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X