பொது செய்தி

இந்தியா

ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் எந்த நேரத்திலும் ராஜினாமா?

Updated : டிச 05, 2010 | Added : டிச 04, 2010 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி : சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ், எந்த நேரத்திலும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு பின், அசோக் சாவ்லாவை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் அமர்த்தவும் மத்திய அரசு தயாராகி வருகிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ். 1991ல் கேரள மாநிலத்தில் உணவுத் துறை

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ், எந்த நேரத்திலும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு பின், அசோக் சாவ்லாவை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் அமர்த்தவும் மத்திய அரசு தயாராகி வருகிறது.


மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ். 1991ல் கேரள மாநிலத்தில் உணவுத் துறை செயலராக பதவி வகித்தார். அப்போது பாமாயில் ஏற்றுமதியில் பெரியளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனால், மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்த விவகாரத்தில், தாமசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டின் போது, மத்திய தொலைத்தொடர்பு துறை செயலராகவும் இவர் பதவி வகித்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட்டில் தாமசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதாக, குற்றப்பத்திரிகையில் தாமசின் பெயர் இடம் பெற்றுள்ளது.


இப்படிப்பட்ட ஒருவர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட முடியுமா' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து சர்ச்சை நடந்த போது, தொலைத்தொடர்பு துறை செயலராக தாமஸ் இருந்துள்ளார்.  எனவே, அதுகுறித்து விசாரணை செய்து வரும் ஊழல் கண்காணிப்பு துறையின் ஆணையராக தாமஸ் எப்படி செயல்பட முடியும்' என்றும் சுப்ரீம் கோர்ட் கடுமையாக சாடியிருந்தது. எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் தாமசுக்கு நெருக்கடி கொடுத்தன. "ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவில் இருந்து தாமஸ் விலக வேண்டும்.  இல்லையெனில் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தின. தாமஸ் இதை ஏற்க மறுத்து விட்டார். "பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. என் மீது எந்த குற்றமும் இல்லை. பாமாயில் ஏற்றுமதி விஷயத்தில் அமைச்சரவை முடிவு செய்ததை தான், நான் செயல்படுத்தினேன்' என்றார்.


இதற்கிடையே, தாமஸ் நியமனம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.  அப்போது, தாமஸ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து, மத்திய அரசுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மத்திய அரசு அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து விலகும்படி, தாமசை வலியுறுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எனவே, எந்த நேரத்திலும் தாமஸ் ராஜினாமா செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தாமசுக்கு பதிலாக புதிதாக யாரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கலாம் என்பதையும் மத்திய அரசு முடிவு செய்து விட்டதாகவே, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  கடந்த 1973ம் பேட்ஜ்  (குஜராத்) ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அசோக் சாவ்லாவை,  புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக மத்திய அரசு ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201020:09:21 IST Report Abuse
மொதமேது சலஹுட்டின் raja um thomos um evvalavu than asingapattalum patavi asaiyilum uzhalilum onrupattu nirkirararkal pale pale
Rate this:
Cancel
க.மொதமேது சலஹுட்டின் - சென்னை,இந்தியா
05-டிச-201020:03:34 IST Report Abuse
க.மொதமேது சலஹுட்டின் ulagame sirukkudu kalaignarin sotthu viviram kettu
Rate this:
Cancel
ர.ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
05-டிச-201019:46:41 IST Report Abuse
ர.ஸ்ரீனிவாசன் திரு .ஆனந்த் அவர்கள் எழுதி இருப்பது மிக சரி. இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியினர் JPC க்கு நாள் கடத்துவதே சோனியா மற்றும் ராகுல் இருவரையும் காப்பாற்றவே. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினை மக்கள் இனம் கண்டு வேர் அறுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X