குளித்தலை எம்.எல்.ஏ.,வுக்கு கட்சியில் பதவி: மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் ஏமாற்றம்

Added : நவ 24, 2015 | |
Advertisement
கரூர்: குளித்தலை, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரத்துக்கு, மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, எந்த பதவியும் வழங்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.அ.தி.மு.க., வில் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில், கரூர் மாவட்டம் குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பா

கரூர்: குளித்தலை, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரத்துக்கு, மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, எந்த பதவியும் வழங்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க., வில் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில், கரூர் மாவட்டம் குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரத்துக்கு, அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 1987ல், அ.தி.மு.க., நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. கடந்த, 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஜெ., அணியில் பாப்பா சுந்தரம், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார். கடந்த, 1991 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஜானகி மற்றும் ஜெ., அணிகள் இணைந்தது. குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட பாப்பா சுந்தரம், ஒன்றுப்பட்ட அ.தி.மு.க., சார்பில் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால், அப்போது குளித்தலை தொகுதி, திருச்சி மாவட்டத்தில் இருந்ததால், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. பிறகு, 1996ல் நடந்த சட்டசபை தேர்தலில், பாப்பா சுந்தரம் குளித்தலை தொகுதியில் தோற்றார். தொடர்ந்து, 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாப்பா சுந்தரத்துக்கு, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஆனால், சில மாதம் வரை மட்டுமே பாப்பா சுந்தரம், அமைச்சராக இருந்தார். பிறகு கடந்த, 2006ல் தேர்தலில் மீண்டும் தோற்ற பாப்பா சுந்தரம், 2011 சட்டசபை தேர்தலில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவராகவும் உள்ளார்.

இதற்கிடையே, கரூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நான்கு ஆண்டு வரை அமைச்சர் பதவியில் இருந்து இவர், சில மாதங்களுக்கு முன் திடீரென, இவருக்கு கல்தா கொடுக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும், செந்தில்பாலாஜி நீக்கப்பட்டு, விஜயபாஸ்கர் என்பவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்நிலையில், மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் அல்லது இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பதவியை பெற, அதிகார மையம் மூலம் செந்தில்பாலாஜி காய் நகர்த்தி வந்ததாக தெரிகிறது. ஆனால், அப்பகுதிகளுக்கு பழைய ஆட்களே மீண்டும் நியமிக்கப்பட்டனர். மேலும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரத்துக்கு, மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியின், மாநில அளவிலான பதவி கனவு கலைந்தது. மேலும், கட்சி பதவி, அமைச்சர் பதவி என, எந்த லிஸ்டிலும் அவரது பெயர் இல்லாததால், அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X