கடலுார்: கடலுார் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவி வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. இன்னும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் வடிந்தபாடில்லை. கடலுார் நகரில் சாலையோரம் உள்ள பகுதிகளை மட்டும் நகராட்சி ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி தண்ணீரை வடிய விடுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் வடிகால் வசதி இல்லாத குடியிருப்புகள், கிராமங்கள், புதியதாக உருவாகி வரும் குடியிருப்புகளில் தண்ணீர் வெளியேற வழியின்றி நாள் கணக்கில் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசுத் தொல்லை மற்றும் குளிரால் மக்கள் துாக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தண்ணீரை வடிய வைக்க அந்தந்த நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களும் துரித நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்களே ஆயில் இன்ஜின் வைத்து தண்ணீரை வடியச் செய்து வருகின்றனர்.
சில இடங்களில் தண்ணீரை வடிகட்ட இன்ஜினை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். பல இடங்களில் தண்ணீர் வடிந்து வடியாததுமாக இருப்பதால் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகள், நகராட்சி கொட்டி வரும் குப்பைகள் எல்லாம் மழையில் நனைந்து ஈ மொய்த்து சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றன.
இது தவிர நகர் மற்றும் கிராமப் புறங்களில் சாலையார குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இந்த குப்பை மேடுகளில் பன்றிகள் மேய்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன்காரணமாக பலருக்கு மர்ம காய்ச்சல், மூட்டுவலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, தலைவலி போன்ற நோய்கள் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதன் விளைவாக அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் வரத் துவங்கியுள்ளது. சுகாதாரத்துறை நோய்தடுப்பு நடவடிக்கை போதியளவு மேற்கொள்ளவில்லை.
கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய நகராட்சிகளில் அனைத்து வார்டுகளிலும் குவிந்துள்ள குப்பைகளை, தானே புயலுக்காக வரவழைக்கப்பட்டதைப்போல, வெளி மாவட்டத்தில் இருந்து துப்புரவு பணியாளர்களை வரவழைத்து துாய்மைப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். நோய் பரவுவதற்கு அடிப்படை காரணமான குப்பைகளை அகற்றினால்தான் நோய் பரவுவதை தடுக்க முடியும்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement