சிறுவருக்கு பாலியல் தொந்தரவு இங்கிலாந்து பாதிரியார் ஆஜர்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுவருக்கு பாலியல் தொந்தரவு இங்கிலாந்து பாதிரியார் ஆஜர்

Added : நவ 27, 2015


திருநெல்வேலி: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, இங்கிலாந்து பாதிரியார், நெல்லை கோர்ட்டில் ஆஜரானார்.
திருநெல்வேலி, வள்ளியூர் அருகே செயல்படும், ஆதரவற்ற சிறுவர் இல்லத்தை, இங்கிலாந்தை சேர்ந்த ஜோனதன் ராபின்சன் என்ற பாதிரியார் நடத்தி வந்தார். 2012 ஆகஸ்ட்டில், அங்குள்ள சில மாணவர்களை, டில்லி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்சென்றார். அங்கு அவர்களிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள் ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ராபின்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட, 9ம் வகுப்பு சிறுவனை மீட்டு, நெல்லை காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின், அந்த சிறுவர் இல்லம் மூடப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பின், ராபின்சன், இங்கிலாந்து சென்றுவிட்டார்.
இரு ஆண்டுகளுக்கு பின், அந்த வழக்கில், அவர், நேற்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜரானார்.
வேலுார் மாவட்டத்தில்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X