அன்னுார்: .மேட்டுப்பாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (29ம் தேதி) நடக்கிறது.
அ.மேட்டுப்பாளையம் செல்வ விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. வாஸ்து சாந்தி மற்றும் காப்பு கட்டுதல் நடந்தது. இன்று (28ம் தேதி) காலை கணபதி ஹோமமும், மாலையில் யாகசாலை பிரவேசமும், இரவு, 108 திரவியங்கள் சமர்ப்பணமும் நடக்கிறது. நாளை (29ம் தேதி) காலை 8:30 மணிக்கு, விமான கோபுரத்துக்கும், செல்வ விநாயகர், மேடை பிள்ளையார், சின்ன பிள்ளையார், தர்மசாஸ்தா தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. கூனம்பட்டி மடம், ராஜசரவண மாணிக்கவாசக சாமிகள், வாகிசர் மடம் காமாட்சிதாச சாமிகள், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள் அருளுரை வழங்குகின்றனர்.