கோவை: 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில், பள்ளி மேலாண்மை குழு
உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, ஒவ்வொரு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில், பெற்றோர், ஆசிரியர்கள், தலைமையாசிரியர், மக்கள் பிரதிநிதிகள் உட்பட, 20 பேர் உறுப்பினர்களாக செயல்படுவர். இவர்களுக்கு, ஆண்டு தோறும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டிற்கான மூன்று நாள் பயிற்சிகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளன. முதல்கட்ட பயிற்சி,
டிச., 9ம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சிகள், 14ம் தேதியும் துவங்கவுள்ளன. மாநில அளவில், இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 798 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.