மழையால் சரிந்த மது விற்பனை: 'டாஸ்மாக்' நிர்வாகம் கவலை

Updated : டிச 02, 2015 | Added : நவ 30, 2015 | கருத்துகள் (19) | |
Advertisement
'சபரிமலை சீசன்' காரணமாக, மது விற்பனை, 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது; தொடர் மழையால், மேலும் சரியும் என, 'டாஸ்மாக்' நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் கடைகளில், தினமும், சராசரியாக, 70 கோடி ரூபாய்; ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 95 கோடி ரூபாய்; தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும். சபரிமலை சீசன்,
மழையால் சரிந்த மது விற்பனை: 'டாஸ்மாக்' நிர்வாகம் கவலை

'சபரிமலை சீசன்' காரணமாக, மது விற்பனை, 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது; தொடர் மழையால், மேலும் சரியும் என, 'டாஸ்மாக்' நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் கடைகளில், தினமும், சராசரியாக, 70 கோடி ரூபாய்; ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 95 கோடி ரூபாய்; தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும். சபரிமலை சீசன், நவ., 17ம் தேதி துவங்கியதை அடுத்து, மது விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த, 14 நாட்களில், மது விற்பனையில், 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுஉள்ளது. மது விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவால், இந்த இரு வாரத்தில் மட்டும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 225 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், தீபாவளியை ஒட்டி கொட்டித் தீர்த்த மழையால், பீர் விற்பனை, 25 சதவீதம் குறைந்து, 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மழை தொடர்வதால், அன்றாட தொழில்களுக்கு பாதிப்புக்கு ஏற்பட்டு, மது விற்பனையும் சரிந்து வருகிறது. எனவே, மது விற்பனையில், நடப்பாண்டின் இலக்கை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுவிற்பனை சரிந்துள்ளது, சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமதுநிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஜூலை-201804:43:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மதுவால் சரிந்த வாழ்க்கையை பற்றி கவலை இல்லை.. தண்ணீரில் மிதக்கும் குடிசைகளை பற்றி கவலை இல்லை. விபத்தில் சாகும் உயிர்களை பற்றி கவலை இல்லை.
Rate this:
Cancel
GREEN HORNET - Tamil Nadu,இந்தியா
05-டிச-201518:13:37 IST Report Abuse
GREEN HORNET He - He....
Rate this:
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
02-டிச-201501:13:30 IST Report Abuse
மண்ணாந்தை டாஸ்மாக்குல ஒருத்தன் 10 ரூபாய்க்கு குடிச்சா, மூணு ரூவா எக்சைஸ், சேல்ஸ் டாக்ஸ் மத்திய மாநில கவர்மெண்ட்டுக்கு கிடைக்குமாம். ஒரு ரூவா டாஸ்மாக்குக்கு கமிஷன் ( இதுவும் நம் மாநில கவர்மெண்டே நடத்துறதால ) மூலமா கவர்மெண்டுக்கு கிடைக்குமாம். பாக்கி 6 ரூவால ஒண்ணரை ரூவா தயாரிப்பு செலவு போக, நாலரை ரூவா மது தயாரிக்கும் கம்பெனிகளுக்கு லாபமா போகும். மது தயாரிக்குற கம்பெனி யெல்லாம் யாருதுன்னு பாரு. நீ பத்து ரூவாக்கு குடிச்சா அவுங்களுக்கு எல்லாம் நேர்மையா இருந்தாலும் நாலரை ரூபாய் கிடைக்கும். இது போக கணக்குல காட்டாம தயாரிச்சு விக்குறதுல களால், விற்பனை வரிகளும் அவிங்களுக்கே கிடைக்கும். அப்போ உன்னுடைய பத்து ரூவால எட்டரை ரூவா அவுங்களுக்கே கிடைக்கும். தயாரிப்பு செலவுல அங்கங்கே பத்து பதினஞ்சு பர்சென்ட் கமிஷன்னு கை வைச்சா அதுலயும் 30 பைசா அங்கங்க எல்லோருக்கும் கிடைக்கும். வருத்தப் படாம என்ன செய்யுறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X