போன் வந்தால், "நடுங்கும்' அதிகாரிகள்!

Added : டிச 01, 2015 | |
Advertisement
அன்றைய தினம் குளிர் காற்று வீசியதால், வெளியே செல்லாமல், சித்ராவும், மித்ராவும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர்."ஈவ்னிங் சமயம் போன் வந்தாலே, மாநகராட்சி அதிகாரிங்க, நடுங்குறாங்க, தெரியுமா,'' என்றாள், சித்ரா."ஏன்? என்னாச்சு? என்ன விவகாரம், வேலையை ஒழுங்கா செஞ்சா, எதுக்கு நடுங்கணும்,'' என, சகட்டுமேனிக்கு மித்ரா கேள்வி கேட்க, "ஒவ்வொரு நாளும் சாயங்காலம், மண்டல உதவி
போன் வந்தால், "நடுங்கும்' அதிகாரிகள்!

அன்றைய தினம் குளிர் காற்று வீசியதால், வெளியே செல்லாமல், சித்ராவும், மித்ராவும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர்.
"ஈவ்னிங் சமயம் போன் வந்தாலே, மாநகராட்சி அதிகாரிங்க, நடுங்குறாங்க, தெரியுமா,'' என்றாள், சித்ரா.
"ஏன்? என்னாச்சு? என்ன விவகாரம், வேலையை ஒழுங்கா செஞ்சா, எதுக்கு நடுங்கணும்,'' என, சகட்டுமேனிக்கு மித்ரா கேள்வி கேட்க, "ஒவ்வொரு நாளும் சாயங்காலம், மண்டல உதவி கமிஷனருக்கோ, சுகாதாரத்துறை அதிகாரிக்கோ, செயற்பொறியாளருக்கோ, மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து போன் போகுது. ஒவ்வொரு மண்டலத்திலும், குடிநீர் இணைப்பு கொடுத்தது; வரி வசூல் விவரத்தை கேள்வி கேக்குறாங்க. வார்டுக்குள் வேலைகள் ஏன் குறைவா நடந்திருக்குன்னு, ஒவ்வொருத்தரையும் ஒரு "பிடி பிடி'க்கிறாங்க. தொடர்ச்சியா, ரெண்டு, மூணு நாள், இதே முறையில், "பாலோ - அப்' செஞ்சதால, மாநகராட்சி அலுவலகத்துல இருந்து, போன் வந்தாலே, அதிகாரிகள் நடுநடுங்குறாங்க,'' என்றாள் சித்ரா.
"வீட்டு விஷேசம்னா, "ஸ்பீடு பிரேக்கரை' எடுக்கற அளவுக்கு, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு தைரியம் வந்துடுச்சு,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"ஆளுங்கட்சிக்காரங்க எப்பவுமே அப்படித்தானே, இப்ப மட்டும் புதுசா,'' என, சித்ரா குறுக்கிட, ""ஷெரீப் காலனியில் இருக்கற, ஆளும்கட்சி வி.ஐ.பி., வீட்டுல விஷேசம் நடத்தியிருக்காங்க. வி.ஐ.பி.,கள் அதிகமா வர்றப்ப இடைஞ்சலா இருக்கும்னு சொல்லி, மாநகராட்சி ரோட்டுல போட்டிருந்த, "ஸ்பீடு பிரேக்கரை'
ராத்திரி நேரத்துல வெட்டி எடுத்துட்டாங்க. மாநகராட்சி நிர்வாகம், "கப்-சிப்'னு, வேடிக்கை பார்த்துட்டு இருக்கு,'' என்றவாறு, "டிவி'யை "ஆன்' செய்தாள் மித்ரா.
ஆளுங்கட்சி "டிவி'யில் அரசின் சாதனை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
உடனே, "அரசாங்கம், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனம் கொடுத்து, சாதனையையும், டெங்கு, சிக்-குன்-குனியா காய்ச்சல் தடுப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டிருக்கு.
அதுல என்னான்னா? மக்கள் தொடர்பு அலுவலகத்தை சேர்ந்தவங்க, வாரத்துல ஐந்து நாள், ஒவ்வொரு நாளும் இரவு, இரண்டு மணி நேரம், இரண்டு இடத்துல வீடியோ ஓட்டணும்.
"இதுக்கு, அந்தந்த ஊராட்சி தலைவர் அல்லது கட்சிக்காரங்ககிட்ட உதவி கேக்கறாங்க. ஆரம்பத்துல உதவி செஞ்சுட்டு இருந்தவங்க,
இப்ப ஓடி ஒளிஞ்சுக்கறாங்க. இதனால, மக்களை திரட்டி, படம் காட்டுறதுக்குள்ள, அதிகாரிங்க கண்களில் தண்ணி வந்துடுது. இப்ப கொடுத்திருக்கற, "வீடியோ வேன்'ல "கேமரா' வச்சிருக்காங்க. படக்காட்சியை எத்தனை பேர் பார்க்குறாங்கனு, சென்னையில இருந்து, கண்காணிக்க முடியும். அதனால, குறைஞ்சது, 50 பேரையாவது சேர்க்க வேண்டியிருக்கு. ஆனா, அந்தந்த ஊரை சேர்ந்த
முக்கிய பிரமுகர்களே ஓடி ஒளிஞ்சுக்கறதால, சிக்கலாகுது,'' என்றாள், சித்ரா.
"கிராமத்துக்கு போயி சாதனை படம் மட்டும் காட்டிட்டு வந்தா, உதவி செய்வாங்க. அதுக்கு தனியா, "பில்' போட ஆரம்பிச்சா, அரசியல்வாதிங்க சும்மா இருப்பாங்களா? "எஸ்கேப்' ஆகியிருப்பாங்க,'' என, கிண்டலடித்தாள் மித்ரா.
"கம்யூ., கவுன்சிலர் பாலம் கட்டப்போறதா, நாம பேசிக்கிட்டோமே, ஞாபகம் இருக்கா,'' என, சித்ரா கேட்க, "ஆமாக்கா, என்னாச்சு?'' என, படபடத்தாள் மித்ரா.
"பயப்படும்படி ஒன்றுமில்லை; சந்தோஷமான விஷயம்தான். எதுக்கெடுத்தாலும், அரசாங்க உதவியை எதிர்பார்க்க வேண்டாமுன்னு, ராயபுரத்தை சுத்தியிருக்கும் பெரிய புள்ளிகள் ஒன்று சேர்ந்து, "பவுண்டேசன்' ஆரம்பிச்சிருக்காங்க. ரோடு, பாலம் கட்டுறதுக்கு, ரூ.2.5 கோடிக்கு வரைவு திட்டம் தயாரிச்சிருக்காங்க. இப்போதைக்கு, நிதி திரட்டுற வேலையில இறங்கியிருக்காங்க. முதல் கூட்டத்துலேயே, 51 லட்சம் ரூபாய் "ரெடி' பண்ணிட்டாங்க. இந்த பாலம் அமைஞ்சா, நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையும்; அதனால, மக்கள் இயக்கமா கொண்டு போகனும்னு ஆசைப்படுறாங்க,'' என்றாள் சித்ரா.
"திருப்பூர் மக்கள், உழைப்புக்கு பெயர் பெற்றவர்களாச்சே; "டாலர்' கணக்கில் பேசுறவங்க; ரெண்டரை கோடி சாதாரணம். பார்த்துக்கிட்டே இருங்க; சீக்கிரமாவே, பாலம் கட்டிருவாங்க,'' என, "சர்ட்டிபிகேட்' கொடுத்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X