புதுடில்லி : தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மத்தி்ய குழு, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மழை பாதிப்புக்கள் குறித்து லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது. இருப்பினும் 42 நிமிடங்களில் சென்னை மழை தொடர்பாக 2 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது.
பிரதமர் ஆலோசனை: சென்னை வெள்ள பாதிப்புக்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை மழை தொடர்பாக லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது. மழை பாதிப்புகள் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுக்காதது ஏன் என காங், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
அரசுக்கு கருணாநிதி ஆதரவு : சென்னை வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளில் தமிழக அரசுக்கு உதவ திமுக தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளில் திமுக குழுவினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
3 நாட்களுக்கு மழை தொடரும் : ஏற்கனவே பெய்த மழையால் சென்னை நகரமே நிலை குலைந்து போய்யுள்ள நிலையில், தென்னிந்தியாவின் கடலோர பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முடங்கிய சேவைகள் : கனமழை காரணமாக சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்து, வெளியூர்களுக்கு செல்லும் பஸ் சேவை, மினி பஸ்கள், புறநகர் ரயில்கள், வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள், விமானங்கள் ஆகியன முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆவடி தொழிற்பேட்டைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், தொழில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கனமழை காரணமாக 1890 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE