புதுச்சேரியில் 'பொளந்து' கட்டுது மழை

Added : டிச 02, 2015 | கருத்துகள் (1)
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக கொட்டி தீர்க்கும் கன மழையால், நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது. மீட்பு பணிகள் மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த இரண்டு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 30ம் தேதி காலை 8:30 மணி முதல், நேற்று முன்தினம் இரவு 10:00 மணி வரையில் 36 செ.மீ., மழை பெய்தது.
புதுச்சேரியில் 'பொளந்து' கட்டுது மழை

புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக கொட்டி தீர்க்கும் கன மழையால், நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது. மீட்பு பணிகள் மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த இரண்டு குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 30ம் தேதி காலை 8:30 மணி முதல், நேற்று முன்தினம் இரவு 10:00 மணி வரையில் 36 செ.மீ., மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணி முதல் பகல் 4:00 மணி வரையில் 3 செ.மீ., மழையும் பெய்தது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழை.
மழையால், புதுச்சேரி நகர வீதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. நகர் பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து மிதக்கிறது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் 69 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் 23 முகாம்களில் 1800 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை தொடர்வதால், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால், மீட்பு பணிக்கு இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று கவர்னர் ஏ.கே.சிங். தெரிவித்துள்ளார்.
மழை நீடிக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (3ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajith - tuticorin  ( Posted via: Dinamalar Android App )
02-டிச-201523:19:24 IST Report Abuse
Ajith pray for Pondicherry....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X