பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு மேலும் ரூ.1,000 கோடிபிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

Updated : டிச 04, 2015 | Added : டிச 03, 2015 | கருத்துகள் (19)
Advertisement
 தமிழகத்திற்கு மேலும் ரூ.1,000 கோடிபிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

சென்னை:தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்கு உடனடியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ஏற்கனவே 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.நவ.,8 முதல் பெய்த மழையில் 8,841 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது. 'இடைக்கால நிவாரணமாக உடனடியாக 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அதைத் தொடர்ந்து உடனடியாக 940 கோடி ரூபாயை பிரதமர் ஒதுக்கினார். கடந்த சில தினங்களாக பெய்த மழையில் சென்னை தனித்தீவானது. நேற்று காலை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று சேதப் பகுதிகளை பார்வையிட்டார். மதியம் ராணுவ விமானத்தில் பிரதமர் நரேந்திரமோடி அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமான தளத்திற்கு வந்தார்.
அங்கிருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடன், ராணுவ ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில், வெள்ள சேதத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின் தலைமைச் செயலகம் அருகே உள்ள ஐ.என்.எஸ்., ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்தார்.அவரை கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வரவேற்றனர். அங்கு பத்திரிகையாளர்களிடம் பிரதமர் மோடி பேசும்போது ''தமிழக மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன்,'' என, தமிழில் கூறினார்.
பின் ஆங்கிலத்தில் அவர் கூறியதாவது:மழை சேதங்களை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன், ஹெலிகாப்டரில் சுற்றி பார்த்தேன்.அளவுக்கு அதிகமான மழையால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு, இந்திய மக்கள் துணை நிற்கின்றனர். தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உடனடியாக 1,000 கோடி ரூபாய் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே 940 கோடி ரூபாய் விடுவிக்கப் பட்டுள்ளது, என்றார்.
மேலும் பிரதமர் மோடி 'டுவிட்டர்' இணைய தளத்தில் 'தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு தோள் நிற்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.


பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை :


தமிழகவெள்ள நிவாரண நடவடிக்கைக்கு குறைந்தபட்சம் 5,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்' என பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று தமிழகம் வந்த பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், மழையால் ஸ்தம்பித்துள்ளன. சென்னையில், 1918க்கு பிறகு அதிகபட்ச மழை பெய்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணி நடந்து வருகிறது.மக்களை மீட்க முப்படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை படையினரை அனுப்பியதற்கு நன்றி.மேலும் கூடுதலாக 10 குழு ராணுவ வீரர்கள், 20 குழு தேசிய பேரிடர் மேலாண்மை படையினரை அனுப்ப வேண்டும்.'வெள்ளத்தால் 8,841 கோடி ரூபாய் சேதம்அடைந்துள்ளது. உடனடியாக 2,000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும்' என நவ., 23ல் உங்களுக்கு மனு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தாங்கள், 940 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு நன்றி.அதில் 2014 - 15ல், மாநில பேரிடர் நிதிக்கு வர வேண்டிய 133 கோடி ரூபாய்; நடப்பு ஆண்டுக்கான, 255 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை ஏற்கனவே மாநில அரசு நிதியில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ளது.
மேலும், 552 கோடி ரூபாய், 14வது நிதிக்குழு திட்டம் பரிந்துரை செய்த சிறப்பு திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணப்பணிக்கு வழங்கப்படவில்லை.எனவே, வெள்ள நிவாரண நிதிக்காக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 5,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.ஏற்கனவே சேத மதிப்பு குறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் பெய்த மழையால் சேதம் ஏற்பட்டுள்ளதால் மேற்கொண்டு ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பான மனு விரைவில் மத்தியஅரசுக்கு அனுப்பப்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
05-டிச-201511:48:37 IST Report Abuse
Devanand Louis மக்களே உசார் உசார் நிவாரண பணி என்று சொல்லி சில தி.மு.க விசமிகள் ஆளிலா வீடுகளில் உள்ளி புகுந்து கொள்ளை , பொருட்களை வெளியில் போடுவது , பெண்களிடம் சில்மிஷம் போன்ற செய்களில் ஈடுபட்டுகொன்ட்ருஇருகின்ரனர் , இப்பொழுது தி.மு.க ஆட்சியா இருந்திருந்தால் மத்திய அரசு கொடுக்கும் பண்ணதில் 2000 கோடியில் , தி.மு.க தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மகன்கள் , மகள்கள் ,பேர்கள் பேத்திகள் என்று பண்ணதை கூறு போட்டு தலா 50 கோடிகளை வீதம் 500 கோடியை சுருடிருபார்கள் , நல்லவேளை தி.மு.க ஆட்சில் இல்லை
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
04-டிச-201516:58:44 IST Report Abuse
mrsethuraman  மோடியின் நடவடிக்கைக்கு நன்றி. அதே போல் போல பேரிடர் மீட்பு குழுவின் பணிகளும் .மீடியாக்களின் பங்கும் மிகவும் பாராட்டதக்கது .
Rate this:
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
04-டிச-201516:47:57 IST Report Abuse
sathish எப்படி பாராட்டினாலும் தகும், இப்போதைய பிரதமரின் செயல்,, உடனடியாக தமிழ் நாட்டுக்கு வந்து பார்த்து செய்த உதவி பாராட்ட வேண்டியது. இதுவரை ஒரு பிரதமாராச்சு இது போல் இருந்து இருக்கிறார்களா? நாட்டுக்கும் மாநிலத்திற்கும் நல்ல மனம் கொண்ட தெய்வ மனம் கொண்ட மனிதர்கள் தான் கிடைத்து இருக்கிறார்கள் ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X