பதிவு செய்த நாள் :
கருத்துகள் (13)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

அடையாறு மற்றும் நேப்பியர் பாலங்களில் முகத்துவார மணல் அடைப்பை திறந்து விடாததால் கடலுக்குள் நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது தெரிய வந்துள்ளது.

கனமழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து முறையே வினாடிக்கு, 80 ஆயிரம் மற்றும், 30 ஆயிரம் கனஅடி நீர் நேற்று முன்தினம் இரவில் திறந்து விடப்பட்டது.இந்த நீர் ஆற்றில் கலந்து கடலுக்குள் செல்ல முடியாமல் நிரம்பியதால் கூவம் மற்றும் அடையாற்று கரைகளிலிருந்து எதிர்த் திசையில் வெளியேறிய நீர், சென்னையின் நகர் பகுதிக்குள் புகுந்து 15 அடி உயரத்திற்கு மேல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கியுள்ளது.

பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட நீர், கூவம் ஆற்றிலிருந்து வெளியேறி ஊருக்குள் பாய்ந்ததால்

ஆவடி, அம்பத்துார், சூளைமேடு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேத்துப்பட்டு, அமைந்தகரை, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து விட்டது.

இதேபோல் கூவத்திலிருந்து அதிகமான உபரி நீரில் ஒரு பங்கு பக்கிங்ஹாம் கால்வாய்க்குள்ளும் புகுந்து விட்டது. அதனால்பேசின்பிரிட்ஜ், சென்ட்ரல் மற்றும் வடசென்னை பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய அரசின் உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் முகத்துவாரங்களை சரியாக திறந்து விடாததால் நீர் செல்ல முடியாமல் தேங்கி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: கூவம் ஆறு கடலில்

Advertisement

கலக்கும் நேப்பியர் பாலப்பகுதியை தாண்டி முகத்துவாரப் பகுதி உள்ளது. வழக்கமாக அதிகமாக நீர் திறக்கப்பட்டால் கரைப்பகுதியில் தேங்கும் மணல், குப்பை கழிவுகள் உள்ளிட்ட அடைப்புகள் மலை போல் தேங்கி நிற்கும் நிலையில் அந்த முகத்துவாரத்தை தோண்டி நீர் செல்ல வழி ஏற்படுத்தவேண்டும்.

அடையாறிலும் இதேபோன்று முகத்துவாரத்தை திறந்து ஆழப்படுத்தும் பணிகளை நடத்த வேண்டும். அதிகப்படியான நீர் திறக்கப்படும் சில நிமிடங்களுக்கு முன் முகத் துவாரத்தை கடற்படை உதவியுடன் பொதுப்பணித்துறையினர் தோண்டுவது வழக்கம். ஆனால் இந்த முறை முகத்துவாரப் பகுதிகளில் தோண்டுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோட்டை விட்டதால் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்

.- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
Kumar - Bangalore,இந்தியா
05-டிச-201501:32:55 IST Report Abuse
Kumar இது தவறான தகவல் முகத்துவாரம் நன்றாக தான் இருந்தது, வேண்டும் என்பவர்கள் wikepedia உள்ள புகைப்படத்தை பார்க்கவும். அங்கே டிரெட்ஜிங் செய்தால் கடல் தண்ணீர் தான் உள்ளே வரும். நாம் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் இல்லை என்பதை உணரவும். ஒரே நாளில் 50cm மழை அதிகமான தண்ணீரை கடத்தி செல்லும் அளவுக்கு ஆற்றின் அகலம் இல்லை இந்த ஏரியின் நீளம் மிக குறுகியது. சென்னைக்கு தஞ்சம் புக வந்தவர்கள் இந்த நகரத்தின் நீர்நிலைகளின் அறிவு இல்லாமல் குட்டைகளிலும், ஆற்றின் மேலையும் வீட்டை கட்டிக்கொண்டு இப்போது புலம்புகின்றனர். இவர்கள் எல்லாம் நிறைய பேர் IT துறையில் பணிபுரிகின்றனர், இவர்கள் எல்லாம் நன்றாக படித்தவர்கள். ஆனால் குளம் குட்டைகலை ஆற்றினை ஆக்கிரமித்து கொண்டனர். அமெரிக்க கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள காட்டும் வேகத்தை நம் நீர் நிலைகளை பற்றி அதன் சிறப்பு தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
05-டிச-201512:33:16 IST Report Abuse
Anandanஉண்மை தெரியாமல் பேசும் உளறல். ஆறும் கடலும் சந்திக்கும் இடத்தில் மணல் அதிகமாக இருக்கும் அதை அவ்வப்போது நீக்க வேண்டும். மழை காலங்களில் இதை நீக்க வேண்டும். தெரிந்ததை மட்டும் சொல்லவும்....
Rate this:
Share this comment
Rajasekar - New Delhi,இந்தியா
07-டிச-201513:29:59 IST Report Abuse
Rajasekarஅரசு துறைகள் சரிவர இயங்க முடிவதில்லை எந்த ஒரு காரியம் செய்தாலும் மேலிட உத்தரவுபடி தான் செய்ய வேண்டும், யாரும் தன்னிச்சையாக எந்த வேலை செய்தாலும் ஆட்சியாளர்கள் கோவத்திர்க்கும் நடவடிக்கைக்கும் பயந்து எல்லா அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படாமல் உத்தரவுக்காக காத்துகிடப்பதுதான் எல்லா அவலங்களுக்கும் காரணம். எல்லா அதிகாரிகளையும் வரம்புக்கு உட்பட்டு செயல்பட அனுமதித்தால் வளர்ச்சி மற்றும் பேரிடர்களை எளிதில் கையாளலாம். அதிகாரம் ஓரிடத்தில் இருந்தால் வரும் துன்பம்தான் இது. அதிகார பரவல், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்க கட்டுபாடுகளை நீக்க வேண்டும். உதவி பொருட்களை வாங்குவது, விநியோகிப்பது என எல்லா தளங்களிலும் உத்தரவுக்கு காத்திருப்பது, கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வதாகிவிடும். தான் என்கிற அகந்தை அழியவேண்டும் அல்லது அந்த தானே அழியவேண்டும்..... முடிவு மக்கள் கையில்.... வோட்டுக்கு கையேந்தியவர்கள் இன்று சோற்றுக்கு கையேந்துவதில் ஆச்சரியம் இல்லை.... நாளைய உங்கள் வோட்டுக்காகத்தான் இன்றைய உங்கள் உரிமை பறிக்கபடுகிறது..... நீங்கள் வாங்கிய T .V , Mixi, Grinder, Laptop ஆகியவற்றுக்கு செலவு செய்த தொகையை நதிநீர் இணைப்பு, வெல்ல மேம்பாடு, தடுப்பணை, ஆறு, ஓடைகள் தூர்வாருதல் போன்ற பணிகளுக்கு செலவிட்டிருந்தால் துயரம் நம்மை நெருங்கி இருக்காது..... இனிமேலாவது வோட்டுக்கு பணம் வேண்டாம், வளர்ச்சி திட்டங்கள் வைத்திருப்போருக்கும் அதை செயல்படுத்த திறமை உள்ளவருக்கும் நமது வாக்கை அளித்து வாழ்கையை காப்பாற்றி கொள்வோம், துயரில் மிதக்கும் அனைவருக்கும் எமது வருத்தத்தையும் அனைவரும் விரைவில் துயரிலிருந்து மீண்டு சந்தோஷ வாழ்க்கைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel
MS Indian - Chennai,இந்தியா
05-டிச-201501:20:54 IST Report Abuse
MS Indian ADMK can go home, gokulindra and other MLAs are useless. no more AIDMA in chennai.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
05-டிச-201512:33:52 IST Report Abuse
AnandanThey should be thrown out from tamilnadu....
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
05-டிச-201501:11:42 IST Report Abuse
Rajesh ஒரே ஒரு ஆதங்கம். சென்னை மட்டும் தான் தமிழ்நாட்டின் அடையாளமா? இது வரை எத்தனையோ மழை பெய்தாலும் இந்த மழையினால்தான் பிற மாவட்டங்கள் அல்லாது நமது தலைநகரம் சிங்கார சென்னை கூட பாதிப்பிற்கு உள்ளானது என்று கூறலாம். தயவு செய்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏரி, குளம், கலவை மற்றும் கடல் துவாரங்களை தூர் வாரி சரி செய்வதற்கு உரிய ஏற்பாடினை மத்திய அரசின் மேற்பார்வையில் உடனடியாக செய்ய வேண்டும். தமிழக அரசு வெள்ளை அறிக்கையை எந்த காழ்புணர்ச்சியும் இல்லாமல் வெளியிட வேண்டும். வேண்டுமென்றால் மாநிலம்தோறும் ஒரு குழு அமைத்து அவர்களிடமும் கருத்து கேட்டு செயல் படுத்தலாம். பொது மக்களும் ஒரு அங்கமாக இருந்தால்தான் இதை போன்ற நிகழ்வுகள் / சீர்கேடுகள் நிகழாமல் தடுக்க முடியும். முடிவாக தயவு செய்து இதை பப்ளிஷ் பண்ணவும்
Rate this:
Share this comment
Cancel
Pandiaraj - Karur,இந்தியா
04-டிச-201521:43:35 IST Report Abuse
Pandiaraj இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அரசு என்ன செய்ய போகிறது?
Rate this:
Share this comment
KARPAGAM - tamilnadu,இந்தியா
05-டிச-201510:40:11 IST Report Abuse
KARPAGAMஅதிகாரிகளே ஒரு மயி ............... புடுங்க மடியாதுடா உங்கள்ளல் .மிக சாதாரணமாக கடந்து போயிருவாங்க...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
04-டிச-201506:57:32 IST Report Abuse
மதுரை விருமாண்டி மூன்று நாட்களுக்கு முன் என் நண்பன் என்னிடம் கேட்ட கேள்வி இது.. உங்கள் பொறுப்பில் இது ஒப்படைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்பது தான். என்னுடை பதில், பல குழுக்களை நியமித்து, ஒன்று அடையாற்றை முகத்துவாரத்தில் இருந்து கப்பல் படை, டிரெட்ஜிங் கார்ப்பொரேஷன், தனியார் இயந்திரங்கள் கொண்டு தூர் வார ஏற்பாடு செய்வேன் என்றேன்.. , வெல்ல நீர் வடிய வேண்டியது முதல் அவசியம்.. அது சும்மா உட்கார்ந்திருந்தால் வடியாது.. அடிவாரத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இன்னொரு குழு சிறு, குறு, பெரு பாலங்களில் நீரோட்டத்துக்கு ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கவும், அடுத்து தனியார், என்.ஜி.ஓ, அரசு தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஒரு குழு.. மழை புயலால் வேலையற்று இருக்கும் மீனவர்களின் படகுகளை ஊருக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு வேலை..மற்றும் மக்களுக்கு சேவை.. புத்திசாலிகளை பக்கத்தில் வைத்துக் கொள்வேன்.. மக்களுக்கு நல்லது செய்வேன்.. வெள்ளம் ஏரிகளை உடைத்து விட்டதால் வந்தது.. இதை இப்படியே விட்டால், ரெண்டு மாசத்துக்கு அப்புறம் தண்ணிக்கு விரல் சூப்பணும். அதனால், மழை வரும் நிலவரைத்தையும், தண்ணிர் ஓட்டத்தையும் கணித்து (ஹைட்ராலாஜி Hydrology என்ற பெரிய துறையே இருக்கு சார்..) உடைத்து விட்ட ஏரிகளை உடனே மூட மணல் மூட்டைகளை எந்தந்த இடத்தில் தேவையோ, அங்கு தயார் நிலையில் வைப்பேன்.. இவ்வளவு நாள் மணலைத் திருடிக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தா காலிகளை தேடிப் பிடித்து இந்த பணியை ஒப்படைப்பேன். முதலில் எல்லாத் துறை, முக்கியமாக பொதுப்பிணித்துறை, வருவாய்த் துறை, கொடுஞ் சாலைத் துறை இவைகளின் மேல் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சீனாவாக இருந்தால் கேள்வி கேட்காமல் சுட்டுத் தள்ளுவேன்.. இந்தியா என்பதால் உள்ளே தள்ளுவேன்.. அவசரம் வேண்டாம்.. இதை செய்யாவிட்டால், நான் நிவாரணத்துக்கு செலவழிக்கப் போகும் ஒவ்வொரு ஆயிரத்திலும் 95% களவாடப்படும்.. என்னுடைய பணம், மக்கள் பணம் திருடப்படுவது எனக்கு கொஞ்சமும் பிடிக்காது.. பிறகு சொன்ன பதில் தான் மேலே உள்ளது எல்லாம்.. சார், எவ்வளவோ நல்லது செய்யலாம் இவர்களால்.. அரசு இயந்திரத்தில் 100% பணம் தின்னும் பிணந்தின்னிக் கழுகுகளாக இருக்கிறார்கள்.. அதனால் வர்ற ரௌத்திரம் தான் சார்..
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-டிச-201521:31:11 IST Report Abuse
Kasimani Baskaranஎந்த நீர் நிலையிலும் மராமத்து செய்வது கிடையாது... ஓட்டுப்போடுபவனுக்கு படிக்க, சிந்திக்க, விவாதிக்க, அதை தைரியமாக அடுத்தவனுக்கு சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.. 40 ஆண்டு கால திராவிடமத ஆட்சியில் 100% சுத்தமான அடிமைகள்தான் உருவாக்கப்பட்டார்கள்... இவர்கள் ஓட்டை மட்டுமல்ல உரிமையையும் கூட சேர்த்தே விற்ப்பார்கள்... "கேள்வி கேட்காமல் சுட்டுத் தள்ளுவேன்" > ஊழல் செய்யும் உரிமையை விலைக்கு வாங்கிவிட்டோம் என்கிறது திராவிடமதக்கூட்டம்.... 20 ஆண்டுகள் இரண்டு கூட்டத்தின் முக்கிய புள்ளிகளை உள்ளே வைத்தால் போதும்......
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
04-டிச-201506:42:30 IST Report Abuse
Loganathan அதிக மழை பெய்யும் மாநிலங்களில் மழை காலத்திற்கு முன் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பார்கள்.தமிழகத்தில் அலட்சியமாக இருந்து விட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
04-டிச-201505:42:41 IST Report Abuse
Anandan இந்த ஆட்சியில் எதுவும் ஒழுங்காக நடைபெறுவதில்லை. ஒன்றுக்கும் உதவாத கூட்டத்தை தேர்ந்தெடுத்த தமிழ்மக்களின் நிலை படு அவலம். மீண்டும் அவர்களை தேர்ந்தெடுத்து தமிழகத்தையே அழிப்போம்.
Rate this:
Share this comment
jeevadinamalar - Tirunelveli,இந்தியா
04-டிச-201507:44:25 IST Report Abuse
jeevadinamalarமிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. கூகுளே மப் இல் வேளச்சேரி ஏறி, ஆதம்பாக்கம் ஏறி, சிட்லபாக்கம் ஏறி ஆகிய ஏரிகளை பார்க்கவும். ஏரி மட்டும் உண்டு. அதற்க்கான வடிகால் விவசாய நிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறிவிட்டது. மழை காலங்களில் ஒரு ஏரிக்கு தண்ணீர் வர ஆரம்பித்தவுடன் உழவர்கள் நிலத்தை செப்பனிட ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் நீர் செலவாகும். மேலும் மழை வரும்போது குறைந்த ஏறி நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும். அனால் இப்போது ஏறி நீர்பிடிப்பு பகுதிகளிலும் வீடுகள். வடிகால் பகுதிகளிலும் வீடுகள்.. எப்படியோ ஈறி நிரம்பிவிட்டது. அந்த நீர் நிலத்தின் சரிவு வாட்டதிர்கேர்ப்ப பாய்கிறது. பிறகு அந்த நீர் ஓடைகளாக மேரி ஓடை ஆறுகளில் கலக்கும். ஆறு கடலில் கலக்கும். இந்த அணைத்து இடங்களும் வீடுகளாக மாறும்போது அரசாங்கம் அவைகளை தடுத்து இருக்க வேண்டும். அரசாங்கமே பஸ் ஸ்டான்டுகளை பல வூர்களில் ஏறி மற்றும் குளத்தில் தான் கட்டி உள்ளது. உதரனத்திற்க்கு வேய்ந்தான் குளம் (திருநெல்வேலி), நாகர்கோயில் போன்ற நகரங்களை சொல்லலாம். இனி எடுக்க வேண்டிய நடவடிக்கை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள சென்னை வரைபடத்தை எடுங்கள். ஓடை , விவசாய நிலங்கள் மற்றும் ஏறி ஆகியவைகளை திரும்ப மீது கொணருங்கள். இதில் விவசாய நிலங்களில் வீடு கட்டியவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அனால் ஏறி புறம்போக்கு, கால்வை புறம்போக்கு இவைகளை திரும்ப பெறவேண்டும். இதுவும் முடியாது. அச்செம்ப்லி தேர்தல் வருகிறது. வோட்டு கேட்டு போகவேண்டும். கேரளா அரசாங்கம் இப்படி ஒரு முடிவு எடுத்த காரணத்தால் இன்று பத்மநாதர் ஆலயம் suttriulla உள்ள பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பழைய கால்வைகள் மீட்கபட்டு வருகிறது. நமது அரசாங்கத்திற்கு மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இந்த துணிவு உண்டா? மக்கள் இதற்க்கு ஒத்துழைப்பார்கள. சாதி கட்சிகள் சும்மா இருக்குமா? ஜீவா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X