பொது செய்தி

தமிழ்நாடு

கடலூரில் நிலைமை என்ன? ஒரு லட்சம் வீடுகள் சேதம்

Updated : டிச 05, 2015 | Added : டிச 05, 2015 | கருத்துகள் (13)
Advertisement
ஒரு லட்சம் வீடுகள் கடும் சேதம்

கடலூர்: தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டம் பாதிப்பை மீடியாக்கள் பெரும் அளவில் கவரேஜ் செய்யவில்லை என்றே சொல்லலாம். தலைநகர் சென்னை பாதிக்கப்பட்டதால் கடலூரில் என்ன பாதிப்பு என்று விவரம் அதிகம் வெளியே வரவில்லை. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், கடலூரை நோக்கி அணி வகுத்து சென்று கொண்டிருக்கின்றன . சமீபத்திய மழையில் ஒரு லட்சம் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகள் வழிந்து பெருக்கெடுத்து ஓடியது. பரவனாறு, செங்கால் ஓடை, கெடிலம் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டதால் மாவட்டமே வெள்ளக்காடானது.

கனமழை, வெள்ளப் பெருக்கில் இதுவரை மாவட்டத்தில் 86 பேர் இறந்துள்ளனர். 40 ஆயிரம் வீடுகள் முழுமையாகவும் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் பகுதி சேதமடைந்தன. 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 2.5 லட்சம் ெஹக்டேர் நிலங்களில் இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

காட்டாற்று வெள்ளத்தால் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்த 65 ஆயிரம் பேர் 100 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி முதல் நேற்று காலை வரை 232.83 மி.மீ., மழை கொட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவைவிட 62 மி.மீ., கூடுதலாக பெய்துள்ள நிலையில் இன்றும் மழை தொடர்ந்து பெய்தது. ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வரும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கடலூரை நோக்கி குவிந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதுதவிர பொதுமக்களும் பல்வேறு இடங்களில் உணவுகளை தயாரித்து வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர்.

ஆளுங்கட்சியினர் அரசியல் : இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வரும் தன்னார்வாளர்களை, அந்தந்த பகுதி ஆளும் கட்சியினர் தடுத்து நிறுத்தி தாங்கள் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
07-டிச-201519:01:06 IST Report Abuse
Murugan நாம் அனைவரும் அதிகமாக சென்னை பேரழிவை பற்றிதான் பேசுகிறோம். எனது நண்பர் (அங்கு நிவராண பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்)கடலூரில் ஏற்பட்டு உள்ள அழிவை விவரிக்கும் போது இங்கிருந்து எங்களால் முடிந்த முதல் கட்ட உதவியாக சிறு தொகை அனுப்பி உள்ளோம்.ஆதலால் நீங்கள் எல்லாம் எங்கிருந்தாலும் உங்களால் முடிந்த உதவியை உடனடியாக உரியவருக்கு சென்று அடையும் விதத்தில் செய்யுங்கள் இது எனது தாழ்மையான வேண்டுகோள். வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
Marudhachalamurthi - Coimbatore,இந்தியா
06-டிச-201512:35:24 IST Report Abuse
Marudhachalamurthi இது போன்ற அரசியல் அயோயக்கியர்களை நிச்சயம் செருப்பால் அடியுங்கள் அச்சம் வேண்டாம் நிச்சயம் நம் ஓட்டு மூலம் சொல்லுவோம்
Rate this:
Share this comment
Cancel
Gopi Jyran - Chidambaram,இந்தியா
05-டிச-201520:04:43 IST Report Abuse
Gopi Jyran வெள்ளத்தில் மிதக்கும் தங்களுக்கு நிவாரணம் கேட்டு கடலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மழை ஈவு, இரக்கமின்றி பெய்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மிதக்கிறது மிதக்கிறது என்கிறீர்களே எங்களின் நிலைமை அதை விட மோசமாக உள்ளது என்று கடலூர் மாவட்ட மக்கள் அலறிக் கொண்டிருக்கின்றனர். கனமழையால் கடலூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் அளிப்பவர்களால் பாதிக்கப்பட்ட மக்களை அடைய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இப்படி ஒவ்வொரு நிமிடமும் மக்கள் வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X