பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளின் பூட்டை உடைக்கும் கும்பல்

Added : டிச 05, 2015 | கருத்துகள் (20)
Advertisement
வீடுகளின் பூட்டை உடைக்கும் கும்பல்

சென்னையில், வௌ்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டு, ஊரை விட்டு வௌியேறியவர்களின் வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடப்பதாக, குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள வீடுகளில் திருட வந்தவனை, பொதுமக்கள் விரட்டினர்.
சென்னையில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர். தாம்பரம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, அனகாபுத்துார், ஜாபர்கான் பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம் என, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், தரைதள வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. இங்குள்ள வீடுகளில் வசித்த பலர், வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களிலுள்ள, தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் குடும்பத்துடன் சென்று விட்டனர். பாதிக்கப்பட்டவர்களில், ஒரு சிலர், மொட்டை மாடிகளில் தங்கியுள்ளனர். பெரும்பாலான இடங்களில், வெள்ள நீரின் அளவு குறைந்தாலும், முழுமையாக வடியாமல் உள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பை பயன்படுத்தி, சமூக விரோதிகள் சிலர், இரவு நேரத்தில், பூட்டை உடைத்து திருட முயற்சிக்கின்றனர். பல இடங்களில் பூட்டு உடைந்து கிடப்பதாக, மாடிகளில் இருப்போர் தங்கள் உறவினர்களுக்கும், போலீசுக்கும், தகவல் அளித்து வருகின்றனர்.
சைதாப்பேட்டையில், நேதாஜி நகர், சாரதாம்பாள் தெரு, ராஜாஜி தெரு மற்றும் குமரன் காலனி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12;30 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை, சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்தது. கீழ்தளத்தில் உள்ள வீடுகளின் பூட்டை உடைக்க முயற்சித்தனர். சத்தம் கேட்டு, மாடியில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், அந்த கும்பல் ஓடியது; அச்சத்தில் துாக்கமின்றி மக்கள் தவிக்கின்றனர்.- சைதாப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி, ஒருவர்
போலீஸ் பாதுகாப்பு வேண்டும்:* வெள்ளம் பாதித்த இடங்களில், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்* வெள்ளம் வடிந்த பகுதிகளில், உடனடியாக மின் இணைப்பை கொடுப்பது அல்லது அப்பகுதிகளில் தெரு விளக்குகளை சரி செய்வது போன்றவை மக்களின் அச்சத்தை ஓரளவு குறைக்கும்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankuni - Edison,யூ.எஸ்.ஏ
07-டிச-201501:31:09 IST Report Abuse
Sankuni எனக்கு கிடைத்த தகவல் படி ராஜ் பவனை சுற்றியுள்ள ஏரியில் நீர் மட்டம் உயர்ந்ததால் சைதாபேட்டையில் தெருக்களில் துளை போட்டு அங்கே நீர் செல்லுமாறு செய்தனர். கவர்னர் மாளிகை இதன் மூலம் வெள்ளத்தில் மூழ்காமல் தப்பியது. சைதாபேட்டையில், ஸ்ரீ நகர் காலனியில் பல வீடுகளில் வெள்ளம் புகுந்து இடுப்பு அளவிற்கு தண்ணீர் இருந்தது. வீட்டில் உள்ள கட்டில், டிவி, சோபா போன்றவைகள் உடைந்ததோடு மட்டுமில்லாமல் தண்ணீர், மின்சாரம், தொலை தொடர்பு இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
MAHA - Trichy,இந்தியா
07-டிச-201500:20:21 IST Report Abuse
MAHA இந்த மாதிரி மனிதாபிமானமே இல்லாத திருட்டு நாய்களை பிடிச்சி கையை காலை வெட்டி போட்டுட்டு காவல் துறைக்கு சொல்லி அனுப்பலாம். எழில்.
Rate this:
Share this comment
Cancel
sankar.p - தேனி,இந்தியா
06-டிச-201518:53:14 IST Report Abuse
sankar.p போலீஸிக்கு தகவல் தராதீர்கள். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் வரை காத்திருங்கள், சென்றவுடன் மீண்டும் கதவை பூட்டி அந்த வீட்டினை சுத்தப்படுத்தச் சொல்லுங்கள் முடிந்தால் ஏரியாவாசிகள் அனைவரும் கம்பு கட்டைகளுடன் வந்து அந்த வீட்டினை கிளீன் செய்த பிறகு ஏரியாவை சுத்தம் செய்யச் சொல்லுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X