சென்னை : கொட்டும் மழையிலும், வீடு, வீடாக சென்று பால் பாக்கெட்களை வினியோகிக்கும் பெண்மணி ஒருவரின், மனித நேயத்தை பகுதிவாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பால், காய்கறிகள், மளிகை சாமான்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்திரி, தக்காளி கிலோ, 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்த நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அதிகாலை, 5:00 மணிக்கு ஆவின் பால் பூத்தில் இருந்து பெற்ற பால் பாக்கெட்களை, அசோக் நகரில் இடுப்பளவு தண்ணீரில், ஒவ்வொரு வீடாக சென்று, வினியோகித்து வருபவர்தான், ராதா,55. அதே பகுதியை சேர்ந்த அவர்,
பலருக்கு தெரிந்த முகம். அடைமழை, வெள்ளம், புயல் என எந்த இயற்கை பேரிடராக இருந்தாலும் தொடர்ந்து, 25 ஆண்டுகளாக வீடுகளுக்கு பால் பாக்கெட் வினியோகிக்கும் அவரது மனிதநேயத்தை பகுதிவாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.