விருத்தாசலம்: மணிமுக்தாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய முதியவரை தேடும் பணி நடக்கிறது. விருத்தாசலம் தீர்த்தமண்டப தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி, 65; இவர், நேற்று அதிகாலை, ஆற்றங்கரையோரம் நடந்து சென்றபோது, மணிமுக்தாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்க முயற்சித்தனர்.
ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அவரை மீட்க முடியவில்லை. அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று, ஆலிச்சிக்குடி வேலு மகள் ஜெய்சங்கரி, 13; இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். நேற்று காலை ஆலிச்சிக்குடி ஓடையில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை, தீயணைப்பு வீரர்கள், போலீசார் தேடி வருகின்றனர்.