மதங்களை கடந்த மனிதநேயம்! காப்பாற்றியவரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய தம்பதி

Updated : டிச 07, 2015 | Added : டிச 06, 2015 | கருத்துகள் (40) | |
Advertisement
சென்னை:வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞரின் பெயரை பெற்றெடுத்த குழந்தைக்கு வைத்து மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாக திகழ்கிறார் ஒரு பெண்.கடந்த 2ம் தேதியன்று 'தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்ற உதவி தேவை' என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதை கேள்விப்பட்டு மீட்புப்பணியில்
மதங்களை கடந்த மனிதநேயம்! காப்பாற்றியவரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய தம்பதி

சென்னை:வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞரின் பெயரை பெற்றெடுத்த குழந்தைக்கு வைத்து மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாக திகழ்கிறார் ஒரு பெண்.


கடந்த 2ம் தேதியன்று 'தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்ற உதவி தேவை' என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதை கேள்விப்பட்டு மீட்புப்பணியில் இருந்த முகமது யூனுாஸ்,‬ 28, என்பவர் படகு மூலம் கர்ப்பிணி சித்ராவின் வீட்டிற்கு சென்றார்.


அங்கிருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். மீட்கப்பட்ட சித்ராவிற்கு இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. தக்க சமயத்தில் காப்பாற்றிய, யூனுாஸ்‬ பெயரையே தங்கள் குழந்தைக்கு வைத்திருக்கின்றனர் மோகன் - சித்ரா தம்பதி.இதைவிட மிக சிறந்த தருணம் வேறேதும் இல்லை, என முகமது யூனுாஸ்‬ தெரிவித்து உள்ளார்.


வென்றது மதம் அல்ல... :மனிதநேயம் மட்டுமே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (40)

Kumar - Chennai,இந்தியா
11-டிச-201502:50:59 IST Report Abuse
Kumar சென்னை சூளைமேடு பகுதியில் வாழும் பிரிட்டோ என்ற காவல்துறையினரின் பாட்டி அந்தோனி அம்மாள் மருத்துவமனையில் இறந்து விட்டார். பிரிட்டோ தொலைபேசியில் உதவி கேட்க, களத்தில் குதித்திருக்​கிறார்கள் முஸ்லிம் இளைஞர்கள். மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டுக்குக் கொண்டு வந்த முஸ்லிம் இளைஞர்கள்தான் அடக்கம் செய்யவும் உதவியிருக்கிறார்கள். வீட்டிலிருந்து சவப்பெட்டியை, இரண்டு கி.மீ. தூரத்துக்கு வெள்ளத்தில் சுமந்து போயிருக்​கிறார்கள். ''கிறிஸ்தவரின் உடலை முஸ்லிம்கள் சுமந்தார்கள் எனச் சொன்னால்கூட அது மலிவான பிரச்சாரம் ஆகிவிடும். இது மனிதநேய உதவி”, எனச் சொல்லியிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். முகமது யூனுஸ் என்கிற இளைஞர், தனது சொந்த செலவில் மீட்புப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். சென்னை பெசன்ட் நகர் பகுதி மீனவர்களுடன் பேசி, படகுக்கு 1,500 ரூபாய் வாடகை வழங்கி, 4 படகுகளுடன் மீட்புப் பணியில் இறங்கினார். இரண்டு நாட்களில் அதிக நபர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டதால், 20,000 ரூபாய்க்கு படகுகளை வாடகைக்கு எடுத்து, கைபேசி மூலம் இணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். 17 படகுகள் வரை தனது சொந்தச் செலவில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தினார். ஒரு கட்டத்தில் தனது பணப்பை, வங்கி ஏ.டி.எம் அட்டைகள் என அனைத்தும் தண்ணீரில் தொலைந்து போக, முகநூலில் தனது நண்பர்களை உதவுமாறு கேட்க, உதவி குவிந்திருக்கிறது. ஊரப்பாக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதல் மாடி வரை மூழ்கி இருந்த வீட்டின் மாடியில் கர்ப்பிணிப் பெண் சித்ரா, உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்திருக்கிறார். முகம்மது யூனுஸ் உடனடியாக நீரில் குதித்து சித்ராவைக் காப்பாற்றி படகில் சேர்த்ததுடன், அவரது கணவர் சந்துருவையும் மீட்டிருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சித்ராவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக, பிறந்த குழந்தைக்கு 'யூனுஸ்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். யூனுஸிடம் பேசிய போது ''இந்த உதவி மனிதாபிமானம் பார்த்துச் செய்தது. அதற்கு எந்தச் சாயமும் பூச வேண்டாம்'' என்றார். மனிதாபிமானத்திற்கு மதங்கள் தடைகளல்ல.
Rate this:
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-201511:14:38 IST Report Abuse
Swaminathan Nath ஒரு மனிதன் மற்ற மனிதனுக்கு உதவினார் , நன்றி, இதில் மதம் வர வேண்டியது இல்லை.,
Rate this:
Cancel
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
09-டிச-201503:48:00 IST Report Abuse
Naz Malick சிப்பி அவர்களே....அவர் இங்கிருந்து போய் குவைதில் வாழ்கிறார். இந்திய முஸ்லிம்கள் எங்கிருந்தும் இந்தியாவுக்கு வரவில்லை. இஸ்லாம் மதத்தை பின் பற்றும் இந்திய மண்ணின் மைந்தர்கள். முஸ்லிம்கள் பன்றிக்கறி சாப்பிடகூடாது. அதற்கு குரானில் clear ஆக விளக்கம் தர பட்டிருக்கிறது. அதற்காக முஸ்லிம்கள், அதை உண்பவர்களை போய் அடித்து வன்முறையில் ஈடுபடுவதில்லை. நான் morocco, Turkey, Tunisia போன்ற பலமுஸ்லிம் நாடுகளுக்கு சுற்றுலா போய் அங்கு ஒரு சில ஹோட்டல்களில் Pork இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் .... அங்கு அதை பற்றி கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் : நம் நாட்டில் 2 அல்லது 3 சதவீதம் christians கூட வாழ்கிறார்கள். அவர்கள் அதை உண்பதற்கு majority முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் தடை விதிப்பது இல்லை . முஸ்லிம் Tolerance க்கு இதை விட வேறு என்ன உதாரணம் தர முடியும்.... மேலும் நீங்கள் தலித்கள் மாட்டு கறி சாப்பிடுவதில்லை என்று சொன்னது மிக்க தவறு. தலித்களில் 80% க்கும் மேல் மாட்டு கறியை தான் உண்கிறார்கள். தமிழ்நாட்டில் வேண்டும் என்றால் நீங்கள் சொல்வது இருக்கலாம். ஆனால் கேரளாவில், மேற்கு வங்கத்தில், நாகலாந்தில், அசாமில், சிக்கிமில், மணிப்பூரில், திரிபுராவில், மிசாரமில், பாண்டிச்சேரியில், அந்தமானில் மொத்தமாக சேர்த்து கோடிகணக்கான ஹிந்துக்களும் விலை சீப் என்பதால் டெய்லி மாட்டு கறி தான் உண்கிறார்கள். இது தான் நிதர்சன உண்மை. கேரளாவில் போன அக்டோபர் மாசம் முழுவதும் assembly building முன்னாலேயே பீப் பார்ட்டி ( we are eating BEEF, come and us ) என்று banner மாட்டி ஓபன் ஆக நடந்தது மறந்து விட்டீர்களா பிரதர்?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X