சென்னை:வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞரின் பெயரை பெற்றெடுத்த குழந்தைக்கு வைத்து மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாக திகழ்கிறார் ஒரு பெண்.
கடந்த 2ம் தேதியன்று 'தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்ற உதவி தேவை' என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதை கேள்விப்பட்டு மீட்புப்பணியில் இருந்த முகமது யூனுாஸ், 28, என்பவர் படகு மூலம் கர்ப்பிணி சித்ராவின் வீட்டிற்கு சென்றார்.
அங்கிருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். மீட்கப்பட்ட சித்ராவிற்கு இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. தக்க சமயத்தில் காப்பாற்றிய, யூனுாஸ் பெயரையே தங்கள் குழந்தைக்கு வைத்திருக்கின்றனர் மோகன் - சித்ரா தம்பதி.இதைவிட மிக சிறந்த தருணம் வேறேதும் இல்லை, என முகமது யூனுாஸ் தெரிவித்து உள்ளார்.
வென்றது மதம் அல்ல... :மனிதநேயம் மட்டுமே!