திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே, சுவர் இடிந்து விழுந்ததில், தொட்டிலில் துாங்கிய குழந்தை பரிதாபமாக இறந்தது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மணக்குப்பம், முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி அஞ்சாமணி, 22. இவர், நேற்று மதியம் 12:30 மணிக்கு, தனது 10 மாத கைக்குழந்தையான அன்புமணியை, தொட்டிலில் துாங்க வைத்துவிட்டு, வீட்டின் பின்புறமுள்ள கொட்டகைக்கு சென்றார். அப்போது கூரை வீட்டின் சுவர் இடிந்து, தொட்டில் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை அன்புமணி, சம்பவ இடத்திலேயே இறந்தான். இது குறித்து திருவெண்ணெய்நல்லுார் சப்- இன்ஸ்பெக்டர் சிவானந்தம் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.