பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்

Updated : டிச 07, 2010 | Added : டிச 06, 2010 | கருத்துகள் (234)
Share
Advertisement
சென்னை : மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள
நடிகர் கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்

சென்னை : மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.


இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. படத்திற்காக, நடிப்புக்காக, சும்மா கதைக்காக, பாடலின் வீரியத்திற்காக யாரும் விளக்கம் கோரலாம். யாரும் எந்த மதஉணர்வையும், சிறுமைபடுத்தியும், இந்திய மக்கள் சட்டங்களுக்கு முரணாக இருக்கக்கூடாது. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டத்தின் வாயிலாகவும், நீதிமன்றத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.


இது குறித்த  மறு பக்கம்...


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=140496


Advertisement
வாசகர் கருத்து (234)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சந்தோஷ் - coimbatore,இந்தியா
08-டிச-201021:48:48 IST Report Abuse
சந்தோஷ் உன் கலை கலையாக மட்டும் இருக்கட்டும் .ஹிந்து மதம் ஒரு கடல்.அதை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.அது உனக்கு இல்லை.சினிமாவை வைத்து மக்களை புண்படுத்த வேண்டாம்.
Rate this:
Cancel
adalarasan - CHENNAI,இந்தியா
07-டிச-201023:34:56 IST Report Abuse
adalarasan இவருடைய சொந்த வாழ்கையில் நடுந்துகொண்டிருக்குக் ஒழுக்கமற்ற செயல்களை பற்றி கூறினால், இவருடைய மனது புண் படுமல்லவா?அதேபோல் கடவுள் நம்பிக்கை வைதுருப்பவர்களுக்கு, இவருடைய இந்து கடவுளை பற்றி அவதூறாக பேசுவது மனதை புன்படுதாதா ? இதில் சந்திரா போன்றவர்கள் ஆதரிப்பு வேறு!? வேதனையாக இருக்கிறது!மற்ற மதங்களை பற்றி பேச முடியுமா? பேசவும் கூடாது!!??அதே போல் இந்து மதத்தை பற்றியும் பேசக்கூடாது!அறிவற்ற செயல்! ஆடலரசன்.
Rate this:
Cancel
விமல்ராஜ் - tirupur,இந்தியா
07-டிச-201023:33:23 IST Report Abuse
விமல்ராஜ் கமல பத்தி பேச யாருக்கும் தகுதி இல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X