சனிக்கிழமை இரவு திக்... திக்...!

Added : டிச 08, 2015
Advertisement
அன்றைய தினம், சித்ராவும், மித்ராவும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தனர். அந்த ஏரியா பரபரப்பாாக இருந்தது. அதைப்பார்த்த சித்ரா, ""என்னடி காமராஜ் ரோட்டுல கூட்டமா இருக்கு; "சைரன்' கார்களும் நெறையா நிக்குதே'' என, கேட்டாள்.""அதுவாக்கா, போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, பறக்கும் பாலம் கட்டப்போறாங்களாம். எலக்ஷன் வரப்போகுதுல்ல. அதனால, அவசர அவசரமா
சனிக்கிழமை இரவு திக்... திக்...!

அன்றைய தினம், சித்ராவும், மித்ராவும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தனர். அந்த ஏரியா பரபரப்பாாக இருந்தது.
அதைப்பார்த்த சித்ரா, ""என்னடி காமராஜ் ரோட்டுல கூட்டமா இருக்கு; "சைரன்' கார்களும் நெறையா நிக்குதே'' என, கேட்டாள்.
""அதுவாக்கா, போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, பறக்கும் பாலம் கட்டப்போறாங்களாம். எலக்ஷன் வரப்போகுதுல்ல. அதனால, அவசர அவசரமா பூமி பூஜை போட்டிருக்காங்க. ஆனா, பாலம் "சென்டிமென்ட்' தெரியாம இருக்காங்க,'' என, இழுத்தாள் மித்ரா.
""அதென்னடி, பாலம் "சென்டிமென்ட்'; விவரமாத்தான் சொல்லேன்,'' என, சித்ரா விடாப்பிடியா கேட்க, ""கடந்த தி.மு.க., ஆட்சியில், சாமிநாதன் அமைச்சரா இருந்தார். ஆட்சி முடியப்போற நேரத்துல, 107 கோடி ரூபாய்க்கு, கோவிலுக்கு மேல, <உயரமா வர்ற மாதிரி, பறக்கும் பாலம் கட்ட அடிக்கல் நட்டார். பாலம் எப்படி அமையும்னு, அற்புதமா "டிசைன்' தயாரிச்சு அமர்க்களப்படுத்துனாங்க; அஞ்சு வருஷம் உருண்டோடிடுச்சு. அடிக்கல் நட்டவர், போன தேர்தல்ல தோத்துட்டாரு; கட்சியிலும், மாநில பதவிங்கிற பேர்ல, ஓரங்கட்டிட்டாங்க. இப்ப, பெருமாள் கோவிலுக்கு ஈசானி மூலையில, பூமி பூஜை நடத்தியிருக்காங்க; என்ன ஆகுமுனு தெரியலை,'' என்றாள் மித்ரா.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக ஒருவர், "கோவிந்தா... கோவிந்தா' என, பக்தி பரவசத்தில் கடந்து சென்றார்.
இருவரும், காலேஜ் ரோட்டில் ஐயப்பன் கோவில் வழியா, ஸ்கூட்டரில் வீட்டுக்குச் சென்றனர்.
கோவிலை பார்த்ததும், சாஸ்தாவை மனதார வணங்கிய சித்ரா, ""ஐயப்பன் கோவில் ஊர்வலத்துக்கு வந்த யானை மிரண்டு ஓடுச்சாமே,'' என, கேட்டாள்.
""ஆமாக்கா, வழக்கமா அழைச்சிட்டு வர்ற வழியில கூட்டிட்டு போகாம, ஏகப்பட்ட ரோட்டுல அலைக்கழிச்சிருக்காங்க. ரயில்வே மேம்பாலத்துல நடந்து போனப்ப, எதுத்தாப்புல ஏகப்பட்ட வண்டிங்க வந்திருக்கு; முகப்பு வெளிச்சத்தால கண்ணு கூசியிருக்கு; ஹாரன் சத்தத்தையும் தாங்க முடியாமா, மிரண்டு ஓடுச்சுன்னு வனத்துறையினர் சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.
""எனக்கென்னவோ சரியா படலை; பிரசன்னம் பார்த்தா நல்லாயிருக்கும்,'' என சித்ரா சொல்ல, ""யானை மிரட்சியில ஓடியிருக்கு; இதுக்குப்போயி பயப்படலாமா,'' என, மித்ரா கிண்டலடித்தாள்.
""எதையுமே, "அசால்ட்'டா விடக்கூடாதுப்பா. பட்டத்து யானைக்கு ஒரு பிரச்னைனா, ராஜ்ஜியத்துக்கு நல்லதில்லைன்னு சொல்லுவாங்க. நம்மூர்ல இருக்கற ஐயப்பன் கோவில், ரொம்ப பழமை வாய்ந்தது. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, இதே மாதிரி, சனிக்கிழமை "நைட்', ஊருக்குள்ள புலி வந்துருச்சுன்னு, களேபரமாச்சு. அதே மாதிரி, இப்பவும், சனிக்கிழமை "நைட்', ஐயப்பன் அங்கியை சுமந்துட்டு போன யானை மிரண்டு, ஓடியிருக்கு. ரெண்டு சம்பவத்திலும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரலை; ஆனா, பீதியாகியிருக்காங்க. ஏதோ ஒரு எச்சரிக்கை வருதுன்னு மனசுல தோணுது,'' என்றாள் சித்ரா.
""அதெல்லாம், கோவிலை நிர்வகிக்கிறவங்க, பார்த்துக்குவாங்க. நீங்க மனசை அலட்டிக்காதீங்க,'' என, "அட்வைஸ்' செய்தாள் மித்ரா.
""நம்மூர்ல இருந்து சென்னைக்கு ஏகப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பியிருக்காங்க; ரொம்ப பெருமையா இருக்கு,'' என, "ரூட்'டை மாற்றினாள் சித்ரா.
""ஆமாக்கா, மாவட்ட நிர்வாகங்கிற பேர்ல, ஆளுங்கட்சிக்காரங்க, பொருட்களை வாங்கி, முதல்வர் படத்தை ஒட்டியிருக்காங்க. தி.மு.க.,காரங்க மண்டபத்துக்குள்ள போயி,
மொபைல் போனில் படமெடுத்துட்டாங்க. அதுக்கப்புறம், வெளியே நின்னு, பொருள் கொடுக்க வந்தவங்கள்ட்ட காட்டி, திருப்பி அனுப்பியிருக்காங்க. பதற்றமடைந்த வருவாய்த்துறையினர், அவுங்களிடம் கெஞ்சி, அனுப்பி வச்சாங்க. பிரச்னை ஓய்ஞ்சதுக்கப்புறம், ஆளுங்கட்சிக்காரங்க, "தன்னிலை' விளக்கம் கொடுத்தாங்க. எதுவா இருந்தாலும், தப்பு தானே? என,
மித்ரா சொல்வதற்கும், வீடு வருவதற்கும் சரியா இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X