பொது செய்தி

தமிழ்நாடு

1992ல் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு மீண்டும் ஏற்படுமா? தாமிரபரணியில் கூடுதல் நீர் திறப்பினால் அபாயம்

Added : டிச 10, 2015 | கருத்துகள் (1)
Advertisement
1992ல் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு மீண்டும் ஏற்படுமா? தாமிரபரணியில் கூடுதல் நீர் திறப்பினால் அபாயம்

திருநெல்வேலி: பாபநாசம் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதால், நெல்லையில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட, 11 அணைகளும் நிரம்பிவிட்டன. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் டிச., 7ம் தேதி காலை, 97 அடியாக இருந்தது; நேற்று மாலை, 114 அடியாக உயர்ந்தது. அணைக்கு, 7,000 கன அடி வீதம் நீர்வரத்து இருப்பதால் அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறக்கப்படும். தற்போது, பாபநாசம் அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது தாமிரபரணியில், வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. பாபநாசம் அணையின் கூடுதல் நீர் மற்றும் மணிமுத்தாறு அணை நீர் சேர்ந்தால், 40 ஆயிரம் கன அடி நீர் வரவாய்ப்புள்ளது.எனவே, நெல்லை, வெள்ளத்தில் சிக்குமோ என்ற பீதி மக்களிடையே நிலவுகிறது.

பாபநாசம் துவங்கி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி, நெல்லை ஜங்ஷன், ஸ்ரீவைகுண்டம், ஏரல் போன்ற ஊர்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மீண்டும் 1992 பாதிப்பு?

கடந்த, 1992ல், டிசம்பர் மாதத்தில், பலத்த மழை கொட்டியது. சேர்வலாறு அணைக்கு அதிக தண்ணீர் வரத்து இருந்தது. அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால், தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வீடுகளை வெள்ளம் மூழ்கடித்தது; பலர் உயிரிழந்தனர். தற்போதும் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படுவதால் வெள்ள அபாயம் குறித்த பீதி மக்களிடையே நிலவுகிறது.


5 ஆயிரம் ஏக்கர் குறுவை 'அம்போ':

நாகையில், ஒரு மாதமாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த, 5,000 ஏக்கர் குறுவை பயிர்கள் நாசமாயின.காவிரியின் கடை மடையான, நாகை மாவட்டத்தில், நடப்பு ஆண்டு, காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்தது. இப்போது மீண்டும் வெள்ள பாதிப்பால், 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவையும் பாதிக்கப்பட்டுள்ளது; விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காவிரியில் வெள்ளத்தை தவிர்க்க கொள்ளிடத்தில் திறப்பு: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம், 90 அடியை எட்டியது. இதனால், அமராவதி அணையில் இருந்து, வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து, மாயனுார் தடுப்பணையை கடந்து, திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணைக்கு வந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, முக்கொம்பு அணைக்கு, 17 ஆயிரத்து, 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரியில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அமராவதி அணை தண்ணீரும் சேர்ந்துள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.ஏற்கனவே, டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து, விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கியிருக்கும் நிலையில், காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால், திருச்சி, அரியலுார் மற்றும் நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; கரையோரங்களில், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்ட விவசாயிகள்: டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கடந்த, இரண்டு நாட்களில், 3.25 டி.எம்.சி., தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் வழியாக திறக்கப்பட்டு, வீணாக கடலுக்கு சென்றுள்ளது. அதிகப்படியான தண்ணீர் வீணாக கடலில் கலப்பதோடு, தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.


23 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர் மழையால், மாவட்டம் முழுவதும் நேற்று வரை நடந்த கணக்கெடுப்பின்படி, 23 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதில், 80 சதவீதம் நெற் பயிர் சேதம் என்றும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர் சேதம், இதைவிட, இரு மடங்கு இருக்கும் என, விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sreedhar M - ஈரோடு,இந்தியா
10-டிச-201507:50:27 IST Report Abuse
Sreedhar M 5 ஆயிரம் ஏக்கர் குறுவை 'அம்போ': .. வேற நல்ல தமிழ் வார்த்தையே கிடைக்க வில்லையா நிருபருக்கு ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X