துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. அதிகாலை ஒரு மணியளவில் சூறாவளி காற்று அடித்ததில் சோரீஸ்புரம் பகுதியில்20 க்கும் மேற்பட்ட வீடுகளில் போடப்பட்டிருந்த தகரம், அஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் காற்றில் பறந்தன. சோரீஸ்புரம், கோரம்பள்ளம், கலெக்டர் அலுவலகங்களில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேராடு சாய்ந்தது. அதிகாலை நேரம் சூறாவளி காற்று வீசியதால்,உயிரிழப்பு இல்லை. பொருட்கள் சேதத்துடன் தப்பியது.நேற்று முன் தினம் காலை முதல் நேற்று காலை 6 மணி வரையிலான மழைப்பதிவு (மி.மீ.,)ல்:சாத்தான்குளம்,11, ஸ்ரீ வைகுண்டம்,94, துாத்துக்குடி,33.20, திருச்செந்துார்,66.30, காயல்பட்டினம்,24, குலசேகரப்பட்டினம்,20, எட்டயபுரம்,10,வேடநத்தம்,10, சூரங்குடி,15, வைப்பாறு,14, ஆகிய இடங்களில் மழைப்பதிவானது. சேதங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
***