ஐ.எஸ்., அமைப்பில் இணைய சென்ற சென்னை வாலிபர் கைது

Added : டிச 13, 2015 | கருத்துகள் (57) | |
Advertisement
புதுடில்லி:ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தில் சேர, சூடான் நாட்டுக்கு சென்ற சென்னை வாலிபர்,இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவனை, தேசியபுலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர். துபாயில்...சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணன் முகமது நாசர் பகீர் முகமது. இவனது தந்தை, துபாயில் பணியாற்றி வருகிறார். 2014ல், துபாய்க்கு சென்று, சென்னை திரும்பிய முகமது, இந்தாண்டு மே மாதம்,
ஐ.எஸ்., அமைப்பில் இணைய சென்ற சென்னை வாலிபர் கைது

புதுடில்லி:ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தில் சேர, சூடான் நாட்டுக்கு சென்ற சென்னை வாலிபர்,இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவனை, தேசியபுலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர்.


துபாயில்...

சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணன் முகமது நாசர் பகீர் முகமது. இவனது தந்தை, துபாயில் பணியாற்றி வருகிறார். 2014ல், துபாய்க்கு சென்று, சென்னை திரும்பிய முகமது, இந்தாண்டு மே மாதம், மீண்டும் துபாய் சென்றுள்ளார்; பின், இணையதளத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டுள்ளார். பயங்கரவாத இயக்கத்தில், முகமது சேர விரும்புவதை உறுதிப்படுத்திய, ஐ.எஸ்., ஆதரவாளன் ஒருவன், வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள, சூடான் நாட்டு விசாவை முகமதுவுக்கு அனுப்பியுள்ளான். அந்த விசாவை பயன்படுத்தி, சூடானுக்கு சென்ற முகமது, அங்கிருந்து லிபியா வழியாக சிரியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டிருந்தார்.


விசாரணை:

ஆனால், அவனது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சூடான் நாட்டு அதிகாரிகள், கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். நாடு திரும்பிய முகமதுவை, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
14-டிச-201512:05:03 IST Report Abuse
Murukesan Kannankulam தமிழனுக்கு வந்த சோதனையா - சிரியாவுக்கே அனுப்புங்க அங்க தான் மனுசனை மிருகமா சாவடிப்பான்
Rate this:
Cancel
Mannan - chennai,இந்தியா
14-டிச-201511:45:13 IST Report Abuse
Mannan இது போல இன்னும் எத்தனை எத்தனை ஆட்கள் உள்ளார்களோ ............ யார்க்கு தெரியும் ........... இது போன்று செய்திகள் அடிக்கடி வருகிறது என்றால் .....இதில் இன்னும் அதிக நபர்கள் ஈடு பட்டு இருக்க தான் வாய்ப்பு ..........கேரளாவில் ...இது போல போக கூடாது என்று அவர்கள் மத அமைப்புகள் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யும் அளவுக்கு நிலைமை போய் விட்டது ........இதே நிலைமை தமிழ்நாட்டிலும் வந்து விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது
Rate this:
Cancel
Rijzvan Ahmed - Jeddah,சவுதி அரேபியா
14-டிச-201511:36:37 IST Report Abuse
Rijzvan Ahmed Dinamalar should give any news with evidence then should be published after that pls. Government should give proper punishment for all terrorist. Dinamalar should not see any difference between religion in case of terrorists. But there should be evidence without any rumor.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X