வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது தினமலர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது 'தினமலர்'

Added : டிச 13, 2015 | கருத்துகள் (3)
Share
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிய 'தினமலர்' நாளிதழை பாராட்டி வழங்கப்பட்ட பாராட்டு பட்டயத்தை 'தினமலர்' துணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை நிறைவேற்றும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில், 'வெற்றி' அமைப்பு சார்பில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் கடந்த ஆக.,
 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது 'தினமலர்'

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிய 'தினமலர்' நாளிதழை பாராட்டி வழங்கப்பட்ட பாராட்டு பட்டயத்தை 'தினமலர்' துணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை நிறைவேற்றும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில், 'வெற்றி' அமைப்பு சார்பில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் கடந்த ஆக., 23ல் துவக்கப்பட்டது.
நான்கு மாதங்களில் 1.3 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன; தனியார் நிலங்களில் சொட்டு நீர் பாசன வசதியுடன் 77 ஆயிரம் மரக்கன்றுகள், கோவில் நிலங்கள், பொது இடங்கள், சாலையோரம், பள்ளி, கல்லுாரிகளில் 53 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இவற்றை குறைந்தது இரு ஆண்டுகள் பாதுகாப்பாக பராமரிக்க ஜி.பி.எஸ்., பொருத்திய 30 தண்ணீர் டேங்குடன் கூடிய டிராக்டர்கள் இயக்கப்படவுள்ளன; மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சும் பணி கண்காணிக்கப்பட உள்ளது.
திருப்பூரில் நேற்று நடந்த திட்ட நிறைவு விழாவில் 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம், ''இலக்கை தாண்டி 1.3 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. திருப்பூரை வனமாக்கும் முயற்சி 'தினமலர்' நாளிதழ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பால் சாத்தியமானது.
நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பாதுகாத்து வளர்க்க 4.5 கோடி ரூபாய் மதிப்பில் 30 டிராக்டர்களை தொழில் துறையினர், தன்னார்வலர்கள் வழங்கியுள்ளனர். மேலும் 10 டிராக்டர்கள் வழங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என்றார்.
திட்ட இயக்குனர் குமார், ''திட்டம் வெற்றி பெற முழு பங்களிப்பை வழங்கிய 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. மரக்கன்றுகள் நட தொழில் துறையினர், தன்னார்வலர்கள் தாமாக முன் வந்து இடம், டிராக்டர்கள் வழங்கினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்களிடையே மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியுள்ளது. எங்களது பசுமைப் பயணம் தொடரும்,'' என்றார்.
மரம் வளர்ப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் குறித்து, 'தினமலர்' நாளிதழ் தொடர்ச்சியாக செய்தி, கட்டுரை, படங்களை வெளியிட்டு வருகிறது.
இதை பாராட்டி நேற்றைய விழாவில் வழங்கப்பட்ட பாராட்டு பட்டயத்தை 'தினமலர்' துணை ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். விழாவில் 'ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரன், கோவை, 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், சி.பி.சி.ஐ.டி., தென் மண்டல, எஸ்.பி., அமித்குமார் சிங், வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், 'வனம் இந்தியா பவுண்டேஷன்' தலைவர் சுந்தரராஜ் மற்றும் திட்ட உறுப்பினர்கள் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X