பரிதவிக்கும் மாணவர்கள்: கைகொடுக்கும் நண்பர் குழுவினர்

Updated : டிச 14, 2015 | Added : டிச 13, 2015 | கருத்துகள் (4) | |
Advertisement
காரைக்குடி:வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்து நிற்கும் மாணவர்களுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர், காரைக்குடி பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், அலுவலர்கள்,நண்பர்கள் குழுவினர்.சென்னை,கடலுாரை புரட்டிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்,கரம் நீட்டும் முன்பே, கை கொடுத்து வருகின்றனர் காரைக்குடி தன்னார்வலர்கள். ஒவ்வொரு நாளும் லாரியில் எண்ணற்ற புத்தகங்கள்,
பரிதவிக்கும் மாணவர்கள்: கைகொடுக்கும் நண்பர் குழுவினர்

காரைக்குடி:வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்து நிற்கும் மாணவர்களுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர், காரைக்குடி பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், அலுவலர்கள்,நண்பர்கள் குழுவினர்.

சென்னை,கடலுாரை புரட்டிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்,கரம் நீட்டும் முன்பே, கை கொடுத்து வருகின்றனர் காரைக்குடி தன்னார்வலர்கள். ஒவ்வொரு நாளும் லாரியில் எண்ணற்ற புத்தகங்கள், நோட்டுக்கள், துணி, உணவு, இதர பொருட்கள் என தங்களால் முடிந்தவற்றை அனுப்பி வருகின்றனர்.உணவு, உடைக்குரிய தட்டுப்பாடு நீங்கினாலும், பள்ளி திறக்கும் வேளையில், நோட்டு புத்தகங்களின் தேவை அவர்களை வாட்டி வதைக்கிறது. அந்நிலையை மாற்ற, நோட்டு, புத்தகம் தேவைப்படுவோருக்கு, ஒவ்வொரு நாளும் கூரியர் மூலம், காரைக்குடி பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அலுவலர்கள் அனுப்புகின்றனர்.


காரைக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி. இவரது மகள் சேதுராணி. சென்னையில் நிலத்தடி நீர் பிரிவில் பொறியாளராக உள்ளார். பிரசவத்துக்காக தந்தை வீட்டுக்கு வந்தார். சென்னை வெள்ளத்தை பார்த்து, கடந்த 7-ம் தேதி, தன்னால் இயன்ற உதவியை வழங்கலாம், என, 'வாட்ஸ் ஆப்' மூலம் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவரது தந்தை எண் 94869 05884, கணவர் சரவணன் 81787 61625, அவரது சகோதரர் சேதுபதி 81486 89993 ஆகியோரின் எண்களை வழங்கியுள்ளார்.அன்று முதல் சென்னை, கடலுாரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு புத்தகங்களை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு கூரியரில் கடந்த 9-ம் தேதி முதல் புத்தகங்களை சுந்தரமூர்த்தி அவரது நண்பர்கள் அனுப்பி வருகின்றனர்.


சுந்தரமூர்த்தி கூறும்போது: எனது மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மூலம், நல்லது செய்ய வேண்டும் என கருதி, மற்றவர்களிடம் இது குறித்து கேட்டேன். உதவி செயற்பொறியாளர்கள் தாசூஸ், பொன்னன், பாண்டி, சங்கர், உதவியாளர் கோடை மலை, உதவி பொறியாளர் நவசக்தி, அஜீத்குமார், எனது மருமகன், மகன் உதவினர்.நடுத்தர, பின்தங்கிய ஏழைகளை தேர்வு செய்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்களை, அவர்களின் வீட்டு முகவரிக்கு தினந்தோறும் கூரியரில் அனுப்பி வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு அனுப்பியுள்ளோம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று புத்தகங்களை சேகரித்து வருகிறோம். .


பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கிடைப்பது இல்லை. பள்ளிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம். அவர்கள் பழைய மாணவர்களிடமும், தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களையும் தருவதாக கூறியுள்ளனர்.வித்யாகிரி பள்ளி முதல்வர், அவர் கோடவுனை திறந்து உங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து கொள்ளுங்கள் எனக் கூறி, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். கூரியரில் புத்தகங்கள் கொண்ட பார்சலுக்கு ரூ.15 மட்டுமே பெற்று உதவியுள்ளனர். இதுவரை ரூ.1.5 லட்சம் வரையிலான புத்தகங்களை அனுப்பியுள்ளோம், என்றார்.


சென்னை குரோம்பேட்டை அமுதா: என் மகன்களுக்கு கூரியரில் புத்தகம் அனுப்பி வைத்தனர். வாழ்க்கையில் இது மறக்க முடியாது. என்றும் நாங்கள் அவர்களுக்கு கடமை பட்டுள்ளோம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

Sharbudeen Mohamed Kassim - Kuala lumpur,மலேஷியா
14-டிச-201509:36:35 IST Report Abuse
Sharbudeen Mohamed Kassim 'காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது' எனும் குறளுக்கேற்ப, புத்தகங்கள் இழந்த பள்ளி மாணாக்கர்களுக்கு தக்க தருணத்தில் புத்தகம் சேகரித்து கூரியர் வழி உதவிடும் நெஞ்சங்கள் படைத்தோர் உண்மையில் உயர்வானவர்கள். இது மெச்சத்தகுந்த, மனித நேயம் மிக்க தமிழினம் என்பதில் நாம் பெருமிதம் அடையும் தருணம்
Rate this:
Cancel
chakkrapani - Vellore,இந்தியா
14-டிச-201508:36:18 IST Report Abuse
chakkrapani கடவுளை வணங்குவதை விட மிக உயர்ந்த செயல் . வாழ்க பல்லாண்டு
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
14-டிச-201508:15:20 IST Report Abuse
மு. செந்தமிழன் சே.... நான் எல்லாம் என்ன மனுஷன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X