சிறு செய்திகள்| Dinamalar

சிறு செய்திகள்

Added : டிச 14, 2015 | |
ரத்ததான முகாம்திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், அனுப்பர்பாளையம் பரணி பெட்ரோல் பங்க் வளாகத்தில், ரத்ததான முகாம் நடந்தது; உரிமையாளர் நடராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீராம் பர்னிச்சர் உரிமையாளர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் செல்வராஜ் தலைமையிலான குழு, 44 யூனிட் ரத்தம் சேகரித்தனர். அமைப்பு செயலாளர் பரமசிவம்,

ரத்ததான முகாம்திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், அனுப்பர்பாளையம் பரணி பெட்ரோல் பங்க் வளாகத்தில், ரத்ததான முகாம் நடந்தது; உரிமையாளர் நடராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீராம் பர்னிச்சர் உரிமையாளர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் செல்வராஜ் தலைமையிலான குழு, 44 யூனிட் ரத்தம் சேகரித்தனர். அமைப்பு செயலாளர் பரமசிவம், நிர்வாகிகள் சுப்ரமணியம், கணேசன், மஞ்சுளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேரவை துவக்கம்ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர் பேரவை மற்றும் ஆங்கில துறை, கணிதம், வணிகவியல் துறை அமைப்புகள் துவக்க விழா நடைபெற்றது. ஏ.வி.பி., கல்வி நிறுவனங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். லதா முன்னிலை வகித்தார். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் முருகேசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, "கணிதத்தின் பயன்பாடு' என்ற தலைப்பில் பேசினார். அனைத்து துறை அமைப்புகளின் நிர்வாகிகள், அறிமுகம் செய்யப்பட்டனர். கல்லூரி முதல்வர் முத்துசாமி, ஆலோசகர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவியர் திரளாக பங்கேற்றனர்.
பாரதியார் பிறந்த நாள்திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில், பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காந்திய மக்கள் இயக்க துணை தலைவர் சுரேஷ், பாரதியின் சிறப்பு குறித்து பேசினார். பள்ளி மாணவர்கள், பாரதியார் வேடம் அணிந்து வந்து, பாடல்கள் பாடினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி ஆகியோர், பரிசு வழங்கினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள விளம்பர துறை சார்பில், தூய்மை பாரதம், பெண் குழந்தை காப்போம், பிரதமரின் மக்கள் நிதி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, வெள்ளக்கோவிலில் நடைபெற்றது. மத்திய கள விளம்பரத்துறையின் தமிழகம், புதுச்சேரி மண்டல இயக்குனர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வெள்ளக்கோவில் நகராட்சி தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டச்சத்து கண்காட்சி நடத்தப்பட்டது. பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.முதன்மை கல்வி அலுவலர் முருகன், சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை, திட்ட அலுவலர் ஜோதிசுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை மண்டல கள விளம்பரத்துறை அலுவலர் சந்திரசேகரன், விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
"லோக் அதாலத்'பல்லடம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், கோர்ட் வளாகத்தில், "லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையில் மாஜிஸ்திரேட் ராணி, பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மாஜிஸ்திரேட் கிருஷ்ணன் தலைமை வகித்தனர். ஜீவனாம்சம், வாகன விபத்து, காசோலை வழக்கு, குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட, 1,758 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்டன; அவ்வகையில், 26 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X