குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை| Dinamalar

குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை

Added : டிச 14, 2015 | |
திருப்பூர் : "காமன் இண்டியன்ஸ்', திருப்பூர் மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனை சார்பில், குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம், திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது.ஐந்தாம் ஆண்டாக நடந்த இம்முகாமை, போலீஸ் துணை கமிஷனர் சுந்தர வடிவேல் துவக்கி வைத்தார். "பெஸ்ட் கார்ப்பரேசன் லிமிடெட்' நிர்வாக இயக்குனர் ராஜ்குமார்,

திருப்பூர் : "காமன் இண்டியன்ஸ்', திருப்பூர் மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனை சார்பில், குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம், திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது.ஐந்தாம் ஆண்டாக நடந்த இம்முகாமை, போலீஸ் துணை கமிஷனர் சுந்தர வடிவேல் துவக்கி வைத்தார். "பெஸ்ட் கார்ப்பரேசன் லிமிடெட்' நிர்வாக இயக்குனர் ராஜ்குமார், "பிலிப்டன் எக்ஸ்போர்ட்ஸ்' சேர்மன் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். "காமன் இண்டியன்ஸ்' சேர்மன் சேஷாத்திரி வரவேற்றார்.சென்னை அப்பலோ குழந்தைகள் நல மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் நெவில் சாலமன், முத்துக்குமார் தலைமையில் மருத்துவ குழு, குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை செய்தது. பங்கேற்ற, 350 குழந்தைகளில், 38 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஜன., 15க்குள், அவர்கள் சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என, "காமன் இண்டியன்ஸ்' நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X