உலகளவிலான சமூக அவலங்களை சித்தரிக்கும் இவரது டாக்குமெண்டரிகள் எண்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில், இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளன. ஆண்டுக்கு 20 படங்களே வெளியாகும் நாட்டில், இவரது படங்கள் வரிசைகட்டுகின்றன.இந்தப்பெருமைகளுக்கு சொந்தக்காரர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சினிமா, டாக்குமெண்டரிகளை தயாரிக்கும் 'ரெக் பிலிம் புரடக் ஷன்' நிறுவனர் பிரான்சிகா ரெக்.தமிழக சினிமா மற்றும் நாடகத்துறை குறித்து ஆய்வு செய்ய மதுரை வந்திருந்தவர் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது...இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்தில் ஆண்டுக்கு 20 முதல் 30 சினிமாக்களே வெளியாகின்றன. தற்போது உலகளவில் சமூக பிரச்னைகள், பண்பாடு, கலாசாரம், அவலங்கள், பிரச்னைக்காக மக்களின் உரிமை போராட்டங்கள் குறித்த டாக்குமெண்டரிகளுக்கு வரவேற்புள்ளன. அதிலும் ஒரு நாட்டின் கலைஞர்கள், மற்ற நாடுகளில் நிலவும் இத்தகைய சமூக நிகழ்வுகளை எடுக்கும் போது அந்த நாடுகளுக்கு இடையில் கலாசார, உறவு பரிமாற்றங்கள் நிகழவும் காரணமாகின்றன.இந்தியாவில் பிரச்னை களுக்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அறவழியில் நடத்திய போராட்டங்களை விளக்கும் 'அகிம்சா' மற்றும் பாகிஸ்தானில் ஒரு சிறிய கிராமத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்வதை விளக்கும் 'முல்தாபர்' உட்பட நான் எடுத்த டாக்குமெண்டரிகள், சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றுள்ளன.சுவிட்சர்லாந்தில் அரசே சினிமா, டாக்குமெண்டரிகள் எடுக்க கடனுதவிகளை வழங்குகின்றன. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சினிமா பிரபலங்களை அரசியல்களத்தில் காண்பது அரிது.இங்கு சினிமாக்கள் வெளியாகும் போது, நடிகர்களின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம், பட்டாசு வெடிப்பது போன்ற அமர்க்களங்களை கேட்கையில் வியப்பாக இருக்கிறது. தகவல் தொடர்பு நவீனங்கள் சினிமா உலகை ஒரு குடைக்குள் கொண்டு வந்துவிட்டன, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE