கடலுார்:நெல்லையைச் சேர்ந்தவர் செருப்புகளை துடைத்து, 'ஷூ'க்களுக்கு, 'பாலீஷ்' போட்டு, அதில் கிடைத்த தொகையை, கடலுாரில், மழையால் பாதித்த மக்களுக்கு, நிவாரண பொருட்களை வழங்கினார்.நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ்; புகைப்படக்காரர்.
தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலுார் மக்களில் சிலருக்கேனும் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என, களத்தில் இறங்கினார்.நெல்லையில் கோவில்கள், நீதிமன்றம், பஸ் நிலையம் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், 'கடலுாரில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிதி உதவி தாருங்கள்' எனக் கூறி, பொது மக்களின் செருப்பு, ஷூக்களுக்கு பாலீஷ் போட்டு, நிவாரண நிதி திரட்டினார்.
இவ்வாறு திரட்டிய, 45 ஆயிரம் ரூபாய், கடுமையாக பாதித்த குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும்
என, முடிவு செய்தார். அதன் படி, கடலுாரில் உள்ள நண்பர்கள் உதவியுடன், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினரை சந்தித்து, அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களை வழங்கினார்.