சென்னை:கூவம் ஆற்றை துார்வாரும் பணியில், பொதுப்பணி துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2ம் தேதி அன்று பெய்த கன மழை காரணமாக, அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின.
இந்த நிலையில், தலைமைச் செயலகம் செல்லும் வழியில், நேப்பியர் பாலத்திற்கு கீழ் கூவம் ஆற்றை துார்வாரும் பணியில், பொதுப்பணி துறை இறங்கியுள்ளது. தண்ணீரில் மிதக்கும் மிதவை இயந்திரத்தை பயன்படுத்தி, பொக்லைன் மூலம் துார்வாரும் பணி நடந்து வருகிறது.