பொது செய்தி

தமிழ்நாடு

மகனுக்கு டி.ராஜேந்தர் வக்காலத்து: 'பீப்' பாடலில் நல்ல கருத்து உள்ளது

Updated : டிச 22, 2015 | Added : டிச 22, 2015 | கருத்துகள் (26)
Advertisement
மகனுக்கு டி.ராஜேந்தர் வக்காலத்து: 'பீப்' பாடலில் நல்ல கருத்து உள்ளது

'பீப்' பாடல் பிரச்னை குறித்து, நடிகர் சிம்புவின் தந்தை, டி.ஆர்., எனப்படும், நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், 'வீடியோ' பதிவு மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இது, 'வாட்ஸ் ஆப்' மற்றும் இணையதளங்களில் பரவி வருகிறது.
டி.ஆர்., கூறியிருப்பதாவது:ஒரு வார்த்தையை மூடி மறைக்க, தொழில்நுட்ப ரீதியில், பயன்படுத்தப்படும், 'டெக்னாலஜி' தான் 'பீப்.' சிம்புவின் பாடல் என, இணையதளத்தில் வெளியான பாடல், திரைப்படத்திலோ, தனிபட்ட ஆல்பத்திலோ இடம்பெற்றது இல்லை; முழு வடிவம் பெற்ற பாடலும் இல்லை. சிம்பு இதை, தொலைக்காட்சியிலோ, அரங்கத்திலோ, மேடை கச்சேரியிலோ பாடவில்லை.இப்பாடல், முறைப்படி, ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யப்பட்டது இல்லை. தனி அறையில், சில, 'டம்மி' வார்த்தைகளை போட்டு பாடி விட்டு, பின், 'வேண்டாம்' என, துாக்கி வீசப்பட்ட பாடல்.இப்பாடலை வேண்டுமென்றே, சில விஷ கிருமிகள் திருடி, திட்டமிட்டு, சிம்புவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிட்டுள்ளனர். இது சத்தியம்; உண்மை.பாடல் வெளியான சமயத்தில், நான் ஐதராபாத்தில் இருந்தேன். உடனடியாக சென்னைக்கு வந்து, இப்பிரச்னை குறித்தும், பாடலை வெளியிட்டவர்களை கண்டு
பிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.இந்நிலையில் தான், கோவையில், பெண்கள் அமைப்பு அளித்த புகாரின் படி, சிம்பு மீது வழக்கு போடப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் படி, சிம்பு மீது சட்ட நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. இதை தொடர்ந்தே, சிம்பு மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.'சைபர் கிரைம்' பிரிவில் கொடுக்கப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சினிமாவுக்கு, 'சென்சார்' உள்ளது. 'டிவி'க்கும் ஒரு விதமான சென்சார் உள்ளது. இதனால், இணையதளங்களில், விஷமிகள் ஆபாசங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கூடா நட்பு இருந்து விட்டாலே, வாழ்க்கையில் இது போன்ற பிரச்னைகள் வரும். இதை சதி என்று சொல்வதா... விதி என்று சொல்வதா... படங்களில், நான் கதாநாயகியரை தொடாமலே நடித்தவன். சிறு வயதில் இருந்தே, சினிமாவில் நடித்து வரும் சிம்பு, பெண்களின் ஆதரவுடனேயே வளர்ந்தவன்.
பெண்களை புண்படுத்தும் எண்ணம் அவனுக்கு கிடையாது.'பீப்' பாடலில், 'பொண்ணுங்களை திட்டாத மாமா, தண்ணி அடிக்காதே, தம் அடிக்காதே' போன்ற நல்ல வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதையெல்லாம் விட்டுவிட்டு, அவர் மூடி வைத்த ஒன்றை தேடி எடுத்து, பிரச்னை வலையில் சிக்க வைத்துள்ளனர்.பெண்களை நான் தெய்வமாக நினைப்பவன். என் மகன் இந்த தவறை செய்யவில்லை. யாரோ திருடி வெளியிட்டது. தமிழக பெண்களின் மனதில் நெருடலை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்; கண்ணீரால் களங்கத்தை துடைக்க விரும்புகிறேன்.'சிம்புவின் படம் தாமதமாக வேண்டும்; அவரை எப்படியாவது ஒழித்து விடவேண்டும்' என, ஒரு கூட்டம் திட்டமிட்டு வேலை செய்து வருகிறது.
'மனசாட்சிக்கு பயப்படுகிறேன்; நான் எங்கும் ஓடி ஒளியவில்லை' என, சிம்பு கூறியுள்ளார்; இப்படிப்பட்டவர் தான் என் மகன்.நான், என் மகன் சார்பில் எல்லா விளக்கத்தையும் சொல்லி விட்டேன். இதிலும் உங்களுக்கு சமாதானம் ஆகவில்லை என்றால், என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை.எல்லாவற்றிற்கும் நல்ல விடையை இறைவன் சொல்வான்.இவ்வாறு டி.ராஜேந்தர் கூறியுள்ளார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nallathuku kalam ila - chennai,இந்தியா
22-டிச-201519:03:03 IST Report Abuse
nallathuku kalam ila யாரு சொல்லுறத நம்புறதுன்னே தெரியல
Rate this:
Share this comment
Cancel
Mr.Zero - Tirunelveli,இந்தியா
22-டிச-201515:27:14 IST Report Abuse
Mr.Zero சிம்பு தம்பி ஏற்கனவே பெண்கள் மேல கற்பழிப்பு, ஆசிட் வீச்சுன்னு நடக்குது, இதுல நீங்க வேற, என்ன-துக்கு லவ் பண்ற ன்னு தூண்டி விடற மாதிரி பாட்டு படிச்சா என்ன செய்ய, இதே பாட்டு கொலவெறி மாதிரி பேமஸ் ஆகி இருந்தா இது தூக்கத்துல உளறுனது, குளிக்கும் போது தண்ணி குளிரா இருந்ததால உளறுனதுன்னு சொல்வீங்களா, காதல்ல தோல்வி கூட சுகமானது. எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்பவன் தான் உண்மையான காதலன். எப்படியோ தம்பி நல்லா இருங்க. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
22-டிச-201513:58:32 IST Report Abuse
Shanu பாடல் துவக்கத்தில் வரும் கெட்ட வார்த்தையை தவிர அறிவுரை கூறும் பாடலாக உள்ளது. அது சந்தேகம் இல்லை. அந்த ஒரு கெட்ட வார்த்தையை தவிர்த்திருந்தால் நல்லது. இந்த பாடல், கொலை வெறி மற்றும் அவளை வெட்டுட, குத்துடா பாடலை விட சிறந்தது தான் (கெட்ட வார்த்தை இல்லாமல் இருந்திருந்தால்).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X