பொது செய்தி

தமிழ்நாடு

2 இரவு, 3 பகலில் 1204 உணவுகள்:கின்னஸ் சாதனையில் 'ஷெப்' ராஜ்மோகன்

Added : டிச 22, 2015
Advertisement

மதுரை:இரண்டு இரவு, மூன்று பகல் என தொடர்ந்து 46 மணி நேரத்தில் 1204 உணவுகள் சமைத்து, உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தினார், சமையல் நிபுணர் ராஜ்மோகன்,31.மதுரை பப்பீஸ் ஓட்டலில் டிச., 19 காலை 7 மணிக்கு துவங்கிய சாதனை, டிச., 21 காலை 7 மணிக்கு முடிவடைந்தது. 46 மணி நேரம் துாங்காமல் 1204 உணவுகளை செய்து, கின்னஸ் உலக சாதனை, இந்தியா மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இவர், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் கேட்டரிங் படித்து முடித்து, பெரியகுளம் மேரிமாதா கல்லுாரியில் கேட்டரிங் துறைத்தலைவராக பணியாற்றுகிறார்.
சாதனை குறித்து ராஜ்மோகன் கூறியது: கத்தரிக்காய், வாழைக்காய் போன்று உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகளை கொண்டு, வித்தியாசமாக உணவுகள் சமைப்பது தான் என் நோக்கம். முதல்நாள் முழுவதும் சைவம், மறுநாள் மாலையில் அசைவம், பின் மீண்டும் சைவம் என 1204 உணவுகளை சமைத்தேன். 2500 பேர் ருசித்து பார்த்து வாழ்த்தினர், என்றார்.இந்தியா சாதனை புத்தகத்திற்கான விருது, சான்றிதழை பேராசிரியர் ஞானசம்பந்தன், ராஜ்மோகனிடம் வழங்கினார். தென்னிந்திய பொறுப்பாளர் விவேக்ராஜா, தில்லைஸ் மசாலா நிர்வாக இயக்குனர் ஜெயசிங் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X