பட்டியலில் முதலிடம் "ஸ்மார்ட் சிட்டி டீம்' குஷி

Added : டிச 22, 2015 | |
Advertisement
வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு, சொர்க்க வாசல் வழியா வந்த, ஸ்ரீவீரராகவப் பெருமாளை தரிசிக்க, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.பெருமாளை தரிசித்து வெளியே வந்ததும், ""எதுவா இருந்தாலும், போனுல ஜாக்கிரதையா பேசணும்,'' என, அறிவுரை வழங்கினாள் சித்ரா.""என்னக்கா, என்னாச்சு? ரொம்ப உஷாரா இருக்கீங்க,'' என, குசலம் விசாரித்தாள் மித்ரா.""பெருமாள் கோவிலுக்கு துப்புரவு
பட்டியலில் முதலிடம் "ஸ்மார்ட் சிட்டி டீம்' குஷி

வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு, சொர்க்க வாசல் வழியா வந்த, ஸ்ரீவீரராகவப் பெருமாளை தரிசிக்க, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.
பெருமாளை தரிசித்து வெளியே வந்ததும், ""எதுவா இருந்தாலும், போனுல ஜாக்கிரதையா பேசணும்,'' என, அறிவுரை வழங்கினாள் சித்ரா.
""என்னக்கா, என்னாச்சு? ரொம்ப உஷாரா இருக்கீங்க,'' என, குசலம் விசாரித்தாள் மித்ரா.
""பெருமாள் கோவிலுக்கு துப்புரவு பணியாளர்கள் தேவைப்படுறாங்க. அதுக்கு, அறிவிப்பு பலகை வச்சு எடுத்துக்குங்கன்னு புதுச வந்திருக்கற "லேடி' அதிகாரி சொல்லியிருக்காங்க. உடனே, வேலைக்கு சேர்ந்து, ஒரு மாசம் கூட ஆகாத தற்காலிக பணியாளர் ஒருத்தர், உணர்ச்சிவசப்பட்டு, அறிவிப்பு பலகை வச்சதோடு, அவரோட மொபைல் எண்ணை போட்டுருக்காரு,'' என்றாள் சித்ரா.
""தப்பாச்சே, கோவில் எண்ணைத்தானே போட்டுருக்கணும்,'' என, உசுப்பேத்தினாள் மித்ரா.
""போர்டை பார்த்த, "லேடி' அதிகாரி, யாருன்னு சொல்லாம, அந்த எண்ணுக்கு கூப்பிட்டிருக்காங்க. என்ன வேலை, என்ன சம்பளமுனு கேட்டிருக்காங்க. பலரது மொபைலில் இருந்து அழைப்பு போயிருக்கு. அந்த ஊழியர், "ராங்கா' பேசியிருக்காரு,'' என்றாள் சித்ரா.
""அச்சச்சோ... அப்புறம் என்னாச்சு?,'' என, படபடத்தாள் மித்ரா.
""என்னாகும்; வேலைக்கு ஆள் எடுக்கறதுனா, கோவில் நம்பரை வெளியிட்டிருக்கணும்; தன்மையா பேசணும்னு சொல்லி, ஒரு பிடி பிடிச்சிட்டாங்க. அவரோட குடும்ப சூழ்நிலை கருதி, வேற கோவிலுக்கு மாத்தியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""நல்ல வேளை, வேலைக்கு சேர காசு கேட்டு சிக்காம தப்பிச்சிருக்காரே. இதே மாதிரி, கோவில் நிர்வாகத்துல இன்னும் கூடுதல் கவனம் செலுத்துனாங்கன்னா, பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்,'' என, "பிட்'டை சொருகிய மித்ரா, ""அனுப்பர்பாளை யம் ஸ்டேஷன்ல, "லேடி' ஏட்டு அலம்பல் தாங்கலையாமே,'' என்றாள்.
""ஆமாம்ப்பா, ஏட்டம்மா வந்துருக்காங்க. மூடு சரியா இருந்தாதான், சி.எஸ்.ஆர்., போடுறது; எப்.ஐ.ஆர்., பிரதி தர்றதுன்னு ரொம்ப "பிகு' செய்றாங்க. சி.எம்., தனிப்பிரிவுல இருந்து வந்த மனுவுக்கு, புகார்தாரரை கூப்பிட்டு, போலீஸ்காரங்க சமரசம் பேசியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""ஏன்? என்னாச்சுக்கா, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்,'' என, மித்ரா கேட்க, ""எம்.எஸ்., நகரில் ஒருத்தரோட வீட்டுல குழாய் இணைப்பு துண்டிச் சிருக்காங்க. பாதிக்கப்பட்ட நபர், சி.எம்., தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருக்கார். அதை விசாரிக்க வடக்கு போலீசுக்கு உத்தரவு வந்திருக்கு. புகார் கூறப்பட்ட நபர் ஆளும்கட்சி என்பதால், அவரை ஸ்டேஷனுக்கு அழைக்காமல், புகார்தாரரை அழைச்சு, சமரசம் செய்து கொண்டதாக எழுதிக் கேக்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""ஆளும்கட்சிக்காரங்களுக்கு எப்போதுமே போலீஸ்காரங்க ஆதரவாதானே இருப்பாங்க. இது கூடவா ஒனக்குத் தெரியாது,'' என்றாள் மித்ரா.
""நம்ம "கார்ப்பரேசன் ஸ்மார்ட் சிட்டி "டீம்' குஷியா இருக்காங்களாமே?'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""இறுதி அறிக்கை கொடுக்குறதுக்கு, "டைம்' கொடுத்திருக்காங்களே. அதுக்கா,'' என, மித்ரா கேட்க, ""அதுக்கில்லப்பா... போன வாரம் சென்னையில, "ஸ்மார்ட் சிட்டி மீட்டிங்' நடந்திருக்கு. பட்டியல்ல முதலிடத்துல, திருப்பூர் மாநகராட்சிதான் இருக்கு. கோவை, மதுரை பத்தியை கேள்வி கேட்காம, திருப்பூரோட நிலையை கேட்டுருக்காங்க; அதிகாரிங்க ரொம்ப குஷியாகிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""கோடிக்கணக்குல நிதி ஒதுக்குவாங்க; லட்சக்கணக்குல "ஒதுக்கலாம்'னு கணக்கு போட்டியிருப்பாங்க,'' என, மித்ரா கிண்டலடிக்க, ""நம்மூரை பட்டியலில் சேர்க்க, தொழில் துறையை சேர்ந்தவங்க நெறைய உதவி செய்றாங்க, யாருனு தெரிஞ்சா அரசியல் தலையீடு வந்துருங்கிற துனால, நல்லது நடந்தா சரினு, அதிகாரிங்க கமுக்கமா இருக்காங்க,'' என்றாள், சித்ரா.
""பாலம் பஞ்சாயத்து என்னாச்சுக்கா,'' என, தெரியாதது போல் கேட்டாள் மித்ரா.
""கடந்த ஆட்சிக்காலத்துல, பாலம் வேலை செய்த ஒப்பந்ததாரரே, புது கலெக்டர் ஆபீசையும் கட்டியிருக்கார். பாலம் வேலை, அங்கங்க பாதியில நிக்குது; முழுசா முடிக்கிறதுக்கு, மறுபடியும் "கமிஷன்' கேட்டுருக்காங்க. "கமிஷன்' கொடுக்காததால, கெடப்புல போட்டுட்டாங்க. இப்ப, சொந்தக்காரரை வச்சு, குளத்துக்குள் கலெக்டர் ஆபீஸ் கட்டியிருக்கிற விவகாரத்தை பெருசாக்கி, கோர்ட்டுக்கு போகப் போறோம்னு சொன்னதும், முக்கிய வி.ஐ.பி., "வார்னிங்' செஞ்சிருக்காரு. இது தெரிஞ்சதும், தி.மு.க.,காரங்க, பாலம் வேலையை சீக்கிரமா முடிங்கன்னு ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்க. "மாஜி' வி.ஐ.பி.,யும் எதுவும் பேசாம, தொண்டர்களோடு தொண்டரா நின்னுட்டு போயிருக்காரு,'' என, விளக்கினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X