சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.49 கோடி பேருக்கு 1,100 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு 1.60 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மத்திய அரசுஓட்டலில் வீட்டு சிலிண்டரை பயன்படுத்துதல், ஒருவரே பல காஸ் இணைப்பு வைத்திருத்தல்
போன்ற காரணங்களால் சிலிண்டர் வினியோகத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது. இதையடுத்து 2015 ஜன., மாதம் சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய
திட்டத்தை மத்தியஅரசு அறிமுகம் செய்தது. முன் வைப்பு தொகைஇத்திட்டத்தின்
கீழ் வாடிக்கையாளர்
சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானிய தொகை அவரின்
வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் இணையும் போது
முன் வைப்பு தொகையாக 568 ரூபாய் வழங்கப்பட்டது. மானிய திட்டத்தில் டிச. 31
நிலவரப்படி 1.49 கோடி பேர் இணைந்துள்ளனர்.
இதுகுறித்துஎண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு மாதமும் காஸ் சிலிண்டர்
விலைக்கு ஏற்ப மானிய தொகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் வங்கி கணக்கில்
மானிய தொகை செலுத்தப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட காஸ் ஏஜன்சி அல்லது
வங்கியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
புகார்மானிய தொகையை வழங்காதது தெரியவந்தால் உடனே எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். தமிழகத்தில் ஓராண்டில் மானிய தொகை மற்றும் முன் வைப்பு தொகை என 1,100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (4)
Reply
Reply
Reply