வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து பெறப்பட்ட, வங்கி கணக்கு எண்களில், குளறுபடி இருப்பதை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியான வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்க கோரி, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. இதனால், இரண்டு லட்சம் பேர், வெள்ள நிவாரணம் பெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பில், வருவாய் துறை ஊழியர்கள்
ஈடுபட்டனர். கணக்கெடுப்பில், வங்கி கணக்கு எண், மொபைல் போன் எண் ஆகியவை
பெறப்பட்டன.பாதிக்கப்பட்டோரின்விண்ணப்பங்களை, வங்கிகளிடம் கொடுத்து சரி பார்த்த போது, இரண்டு லட்சம் பேரின் வங்கி கணக்கு எண் தவறாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அதை சரி செய்வதற்காக, சரியான வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்கும்படி, சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில்மட்டும், 11.50 லட்சம் பேரின் வங்கி கணக்கு எண்கள் சேகரிக்கப்பட்டன. அதில், இரண்டு லட்சம் வங்கி கணக்கு எண் முறையாக இல்லை. அதேபோல், வங்கி கணக்கு எண் இல்லாத, ஒன்றரை
லட்சம் பேருக்கு, 'வங்கியில் கணக்கு துவக்கி இருந்தால், வங்கி கணக்கு எண்ணை தெரிவியுங்கள்' என, எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளோம். மற்ற மாவட்டங்களிலும், வங்கி கணக்கு முறையாக இல்லாதவர்களிடம் விவரம் கேட்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (5)
Reply
Reply
Reply