மதங்களும் சட்டங்களும் 10; பொது சிவில் சட்டம் தேவையா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

மதங்களும் சட்டங்களும் 10; பொது சிவில் சட்டம் தேவையா?

Added : ஜன 05, 2016

இந்தியாவில் ஒவ்வொரு மதமும் தனக்கென ஒரு அடிப்படை கட்டமைப்பைக் கொண்டே விளங்குகிறது. அது அதற்கான சரி தவறுகள் வெவ்வேறாக உள்ளது. காரணம், எல்லா மதங்களும் ஒரே இடத்தில், தலத்தில் ஒரெ நேரத்தில் ஒரே கூட்டத்தில் தோன்றியவை அல்ல. அன்றைய இந்திய நிலப்பரப்பில், பல்வேறு மதங்கள் வந்து இறங்கின. தன்னோடு, தன்னுடைய சரி தவறுகளையும் கொண்டு வந்தன.

வெவ்வேறு சரி தவறுகள் அடிப்படையில் மதங்களாகப் பிரிந்து இருந்த மக்கள், ஆனால் ஒரே தலத்தில் குடியிருக்க வேண்டிய சூழலில், ஒரே சட்டம் இருப்பதே கைக்கொள்ளவும் கட்டுப்படுத்தவும் எளிதாகவும் இருக்கும்.


இந்திய அரசியல் சாசனத்தின் முதன் வரைவு செய்த போதிருந்தே, அன்றைய அறிஞர்கள், அம்பேத்கர் போன்ற சட்ட மேதைகள், சட்டம் தலம் சார்ந்ததாக இருத்தலே கைக்கொள்ள எளிது என நம்பியதாலேயே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அணூtடிஞிடூஞு 44 வரைவு செய்யப்பட்டது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் - Article 44 சொல்வதென்னவென்றால்..


Article 44 in The Constitution of India 1949

44. Univorm civil code for thecitizens The State shall endeavour to secucre for the citizens a uniform civil code throughout the territory of India.

பொது சிவில் சட்டம் தேவை என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறினாலும், அதை அப்படியே உடனே செயல்படுத்த முடியாது என்பதை அறிஞர்கள் அறிந்தே இருந்தனர். ஏனெனில், அது சமூக சட்டமும், தனிநபர் சட்டத்திலும், அதாவது மத சட்டத்திலும் மாற்றம் கொண்டுவர வேண்டிய ஒன்று என்பதால், அது மதச் சட்டங்களைப் பின்பற்றுபவர்களை, மத அடிப்படைவாதிகளைச் சீண்டும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாகவே இருந்தனர்.

இந்தியச் சட்டம் தலம் சார்ந்ததாக இருப்பதால், இனம் சார்ந்த சட்டமாகிய தனிநபர் அல்லது மதச்சட்டங்களுக்கும் நாட்டுச் சட்டத்திற்கும் இடைவெளி இருந்தே வருகிறது. ஆனால், மத /இன சட்டங்களுக்கும் தலம் சார்ந்த நாட்டுச் சட்டங்களுக்கும் எல்லா நாடுகளிலும் பிரச்னை இருக்கவில்லை. இந் நிலையில் இந்தியாவிலும், மதச் சட்டங்கள் தலம் சார்ந்ததாக ஆக, பொது சிவில் சட்டம் தேவை எனும் கருத்தும், இல்லை, மத /இன சட்டங்களுக்கு என தனி மதிப்பு மரியாதை கொடுக்கப்படவேண்டும் என்று ஒரு வாதமும் முன் வைக்கப்படுகிறது.

இந்திய சட்டம் மத /இன சட்டங்களை மட்டுமல்ல, வழக்காறுகளையும் ஏற்றே வந்திருக்கிறது என்பதை நாம் இதுவரை பார்த்து வந்த அலசிய இந்த கட்டுரைத் தொடரில் கவனித்தே வந்தோம்.

உதாரணமாக,

முன்பு இந்துக்களிடையே, கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தே வந்தது. ஆனால் அது மனித உரிமை மீறல் மற்றும் பெண்களை இழிவு செய்யும் வழக்கம் எனவும், சரியான முறையில் பார்க்ப்பட்டு, இந்துக்களின் வழக்காறுகளில் ஒன்றான இந்த பழக்கம் இந்திய தலத்தின் நாட்டுச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது.

இஸ்லாமியர்களிடயே மணமகன், மஹர் என மணப்பெண்ணுக்கு மணக்கொடை வழக்கம் உண்டு. அந்த வழக்கம் அந்த மணவாழ்க்கை பாதியில் முடிவுக்கு வந்தாலோ, கணவனை இழக்கும் நிலை வந்தாலோ அவளது வாழ்க்கைப் பொருளுதவியாக அது இருக்கட்டும் என்றே தோன்றியது. அதிக மஹர் கொடுக்கத் தயாராவதன் மூலம் ஒரு மணமகன் தன்னை நிருபிப்பதாகவும் அது அமைகிறது. ஆனால், வழக்கத்தில் அநேக சமயங்களில் மணமகன், மணமகளுக்குத் தரும் சிறு அன்பளிப்பு போல, குறைந்த தொகையோடு முடிந்துவிடுகிறது.


மணமகன் தரும் அந்த மஹர் தொகையை திருமணத்தின் போது தராமல், பிறகு தருவதாகவும் தரப்பினர் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என அந்த மத வழக்கம் இருக்கையில், அந்த பணத்தை மனைவியானவள் கணவனிடமிருந்து, அவன் தர வேண்டிய கடன் தொகையை வசூலிப்பது போல, நீதிமன்றத்தில் வழக்கிட்டு கூட வசூலித்துக் கொள்ளலாம். ஆனால், முதலில் ஒப்பந்தம் செய்து கொண்ட தொகையானது மிக மிகச் சிறு தொகையாக இருந்தால், அதை வசூலித்துக் கொண்டாலும் கூட, திருமண பந்தம் நிறைவுக்கு வரும் போது, அவளது அடிப்படைத் தேவைகளைக் கூட கவனித்துக் கொள்ள அந்தத் தொகை போதுமானதாக இருக்காது. இந்நிலையில் மஹர் எனும் குதூண்tஞுட்-ன் பயனே அற்றுப் போகிறது. இது மனைவிக்கு இழைக்கப்படும் துரோகம், மனித உரிமை மீறல் என எண்ணம் வந்த போதுதான் ஷா பானு வழக்கின் முடிவு மனைவிக்குச் சாதகமாக அமைந்தது.

இஸ்லாமியச் சட்டத்தில், மஹர் தொகை கொடுத்திருக்கும் போது, திருமண பந்தம் முடிவுக்கு வந்தால், அதன் பிறகு மனைவிக்குக் கணவன் இத்தா காலத்தில் பராமரிப்புத் தொகை தரத் தேவை இல்லை என்று இருக்கிறது. இந்த வழக்கில், அந்த இஸ்லாமிய மனைவியானவர், இந்த வழக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கிட்டார்.

1985ம் ஆண்டு ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஏனெனில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் - பிரிவு125 போதுமான வருமானம் உள்ள ஆண், மனைவி பிரிந்திருந்தாலும், அவள் மறுமணம் செய்யாதிருக்கும் நிலையில் அவளுக்கான வாழ்க்கைப் படியைத் தர வேண்டும் என்கிறது.

இஸ்லாமிய மதச் சட்டத்திற்கும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கும் இடையேயான சிக்கலில், மனித உரிமையை மீட்டெடுக்கும் வகையிலும், பெண்ணுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்தது.

இது போலவே கிறித்தவச் சட்டத்திலும் அதன் வழக்காறு இந்தியச் சட்டங்களால் ஏற்கப்பட்டாலும், மனித உரிமை மீறல் போன்ற அடிப்படை மீறல்கள் இருந்தால் அந்த இடங்களில் எல்லாம் இந்திய சட்டம் தலை நுழைக்கவே செய்கிறது. செய்யவும் முடிகிறது.


ஆனாலும், இன்ன பிற நாடுகளில் இருப்பதைப் போல சிவில் சட்டம் இந்தியாவில் இன்னும் ஏற்படாமல் இருக்க என்ன காரணம்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article 44 ஏன் இன்னமும் ஏன் சட்டப் புத்தகத்தில் மட்டும் இருக்கிறது?

அரசியலமைப்புச் சட்டப்படி மட்டும் பார்த்தால் இதற்கு அடிப்படையாக ஒரு காரணத்தைக் கூறலாம். அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் Article 44 எனப்படும் பொது சிவில் சட்டம் பற்றிக் கூறும் இந்த வாசகம். அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறைப்படுத்தும் கொள்கைகள் எனும் தலைப்பின் கீழான Article 36 முதல் -Article 51 51 வரையான பகுதியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் நெறுமுறைப்படுத்தும் கொள்கைகள் என்பது, அரசு இனி இன்னின்ன விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளே அவை.

ஒரு தனி நபருக்கு, என அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் பேச்சுரிமை, எழுத்துரிமை, தொழில் செய்யும் உரிமை போன்றவை பரிக்கப்பட்டால் அவற்றை அந்த அரசு வழங்கியே ஆக வேண்டும் என சட்டம் வலியுறுத்தலாம்.

ஆனால், நெறிமுறைப்படுத்தும் கொள்கைகளை அப்படி கட்டாயப்படுத்த முடியாது. ஆகவே அரசியலமைப்புச் சட்டத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், பிரிவு 44 ஐ செயல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை.


இது போக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article 25(1)

Article 25(1)

Subject to publis order, morality and health and to the other provisions of this Part, aal persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion என்கிறது.

சரி. பொது சிவில் சட்டம் வேண்டுமா? வேண்டாமா?


எதனால் பொது சிவில் சட்டம் வேண்டும்?வேண்டாம்?

மதச்சட்டங்கள், மதம் எனும் போர்வையில், அந்த மதக் கூட்டத்திலேயே எளியவர்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை. குறிப்பாகப் பெண்களுக்கு ஆதரவாக எந்த மத சட்டமும் இல்லை என்கலாம். கணவனுக்குக் கீழ்படிந்து நடக்க கிறித்தவம் பைபிளில் சொல்கிறது. அதயே இஸ்லாமும், இந்து மதமும் வெவ்வேறு மொழியில் நடையில் சொல்கின்றன.

மதச் சட்டங்கள் இந்த பிழையை சரி செய்து கொள்ளாவிட்டால், அங்கெல்லாம் மனித உரிமை மீறல் எனும் அடிப்படையில் ஒரு நாட்டுச் சட்டம் தலையிடுவதில் தவறே இல்லை. தனி நபர் சட்டம் எனும் பெயரில், பெண்கள் கூட்டுக்குள் அடக்கி வைக்கப்படுவது எல்லா மதத்திலுமே இருந்தே வருகிறது. அதற்கு அந்தந்த மதத்தில் இருக்கும், எளியவர்கள் குறிப்பாக பெண்கள் குரல் கொடுக்க வேண்டி இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது, எளியவர்களுக்கானதாக இருக்கும் பட்சத்தில் அது குறித்து பெண் உரிமை அமைப்புகள் அதிகம் பேசுவதில்லை. அதன் காரணமும் அலசப்பட வேண்டி இருக்கிறது.

பொது சன நலம் பற்றிப் பேச வேண்டிய அரசியல் தலைவர்களும், ஓட்டு வங்கிக்காக அதுபற்றி தெளிவான கருத்தில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். ஷாபானு வழக்கின் போது ராஜிவ்காந்தி அவர்கள் அந்த தீர்ப்பை, மாற்றத்தை முதலில் ஆதரித்தார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அந்த தீர்ப்பை எதிர்த்துக் குரல் கொடுத்ததும், இஸ்லாமியர் வாக்கு வங்கி பறிபோகும் எனும் எண்ணத்தில் தன் ஆதரவை ராஜிவ்காந்தி நீக்கிக் கொண்டார்.


மதச்சட்டங்கள் தன்னை சீரமைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

"இஸ்லாமின் சிறந்த வரலாற்று அறிஞரான பைஸின் வரிகளை, அறிஞர் வசுதா தாகம்வார் "பரிணாமம் என்பது மனித சமூகத்தோடு உடன் இணைந்து இறந்து போனவெ உயிரற்றவை தவிர வேறு எதுவும் நிலையானது அல்ல. சட்டங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி நிச்சயம் இருக்க முடியாது. குரான் பலதார திருமணத்தை ஆதரிக்கிறாதா இல்லையா என்பது தேவையற்றது, நம் முன் உள்ள கேள்வி பாலின சமத்துவத்தில் நவீன பார்வையைக் கொண்ட சமூகம் இவற்றை ஏற்க வேண்டுமா என்பதுதான்” -என பூ.கொ.சரவணண் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

சரிபொது சிவில் சட்டம் உள்ள பிற நாடுகள் எப்படி அதைக் கொண்டு வந்தன? என ஆராய்ந்தால், அருமையான வேறொரு விடை கிடைக்கிறது

அந்த நாடுகள் இந்தியா போல மதசார்பற்றவை அல்ல.

...இன்னும் அலசுவோம்

- ஹன்ஸா

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X