பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை மரம் ஏற ஆர்வம் காட்டும் ராமேஸ்வரம் இளைஞர்கள்

Added : ஜன 05, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 தென்னை மரம் ஏற ஆர்வம் காட்டும் ராமேஸ்வரம் இளைஞர்கள்

காந்திகிராமம்,: ராமேஸ்வரம் இளைஞர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்பு இல்லாததால் தென்னை மரம் ஏறும் பயிற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர்.ராமநாதபும் மாவட்டத்தில் குந்துகால், தரவை தோப்பு, அக்காள்மடம், தங்கச்சிமடம் பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. இதுதவிர பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை தென்னை மர சாகுபடி உள்ளது.
இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். வேறு தொழிலில் ஈடுபடும் வாய்ப்புகள் குறைவு. இந்நிலையில் அங்குள்ள இளைஞர்கள் தென்னை ஏறும் தொழில் செய்ய முன்வந்தனர். இதையடுத்து திண்டுக்கல் காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தின், 'தென்னை மர நண்பர்கள் பயிற்சி திட்டம் குறித்து அறிந்து உடனடியாக பயிற்சியில் சேர்ந்தனர்.
பாம்பனை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், 29, யேசுராஜன், 20 கூறியதாவது: எங்கள் பகுதியில் மீனவப் பணிதான் பிரதான தொழில். படிக்காத இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். அதிகளவில் பனை, தென்னை மரங்களும் செழித்து வளர்ந்துள்ளன. முறையான விவசாயம் தெரிந்த
பணியாளர்கள் குறைவாக உள்ளனர்.இதனால் பனை, தென்னை விவசாயிகள் குரும்பை கொட்டுதல், உழவுப் பணி, நீர்மேலாண்மை, உர மேலாண்மைப் பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
தற்போது காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மைய தென்னை மர நண்பர்கள் பயிற்சியில் அனுபவம் பெற்றோம். இதன் மூலம் அப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும், என்றனர்.மைய பேராசிரியர் உதயகுமார், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில்குமார் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளாக பயிற்சி நடக்கிறது. இந்தாண்டிற்கான பயிற்சி தற்போது துவங்கியுள்ளது. பாம்பன் பகுதி இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சி இளைஞர்கள் மத்தியில் மாற்று வேலைக்கான திறன் அதிகரித்துள்ளது, என்றார். பயிற்சி விபரங்களுக்கு 90470 - 54350 தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-ஜன-201613:07:04 IST Report Abuse
Pasupathi Subbian முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
06-ஜன-201606:17:13 IST Report Abuse
Manian இவனுக இளநீரை எப்பிடி கேனில் அடைச்சு விக்கறது, தேங்காயை துருவி பாக்கெட்லே பண்ணி விக்கிறது(மலேசியா, தாய்லாந்திலெல்லாம் அப்படி செய்வதையும்)பல குஜரராத்திகள் இந்த ஏற்றுமதி மூலம் கோடிக்கனக்கில் சம்பாதிப்பதை எனது அமெரிக்க தோழர் படம் மூலம் காட்டினார். ஹிந்தி தெரிந்த நபர்கள் மூலம் இந்த பையன்கள் தொழில் தொடங்கலாம். குஜராத்திகளே மூலதனமும் போட்டு பார்டனர் ஆவார்கள். இதற்கான பாக்கிங் யந்திரங்களும் விற்கப்படுகின்றன. இந்த மாணவர் செய்வார்களா? தென்னை மரம் ஏறுவது ஒருவித ஆளுமைத்திறனேகேவலம் இல்லை சிறு வயதி (40 அடி உயரம் வரை) தென்னை மரம் ஏறி கோடை காலத்தில் இளநீர் குடித்து, காயை அருவாளால் இரண்டாக பிளந்து அதில் உள்ள இனிப்பான வழுக்கை தேங்காயை அனுபவித்த நினைவில் இதை எழுதினேன்.
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
06-ஜன-201601:31:10 IST Report Abuse
அன்பு அந்த காலத்தை போன்று இனியும் தென்னை மரமேறி பொழப்பு நடத்துவது, பரிதாபத்துக்கு உரியது. எனக்கு தெரிந்த ஒரு முதியவர் தென்னை மரத்தில் இருந்து விழுந்து, ஆறுமாதங்கள் எழுந்து நடமாட முடியாமல், காலம் முழுக்க பிறகு முழு குணமடையாமல் வாழ்ந்து இறந்தார். இது தேவையா? தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்க கூடிய மிஷின்களை கூட, உற்பத்தி பண்ண முடியாமல், நிலவிற்கு விமானம் செலுத்தி என்ன பயன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X