ராகவ கிருஷ்ணாவின் சொக்க வைத்த பாட்டு| Dinamalar

ராகவ கிருஷ்ணாவின் சொக்க வைத்த பாட்டு

Updated : ஜன 06, 2016 | Added : ஜன 06, 2016 | |
சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் V.R. ராகவ கிருஷ்ணாவின் பாட்டு இடம் பெற்றது. இவர் வித்வான் P.S. நாராயணஸ்வாமியிடம் முறையாக இசை பயின்றவர். தற்சமயம் அவரின் பெரியப்பா வயலின் மேதை வி.வி. சுப்ரமணியத்திடம் பயின்று வருகிறார். வயலின் வித்வான் V.V. ரவி அவர்களின் புதல்வன். சொல்ல வேண்டுமோ நல்ல இசைப்பாரம்பரியத்தில் வளர்ந்து வருபவர். இசை நிகழ்ச்சியில்
ராகவ கிருஷ்ணாவின் சொக்க வைத்த பாட்டு

சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் V.R. ராகவ கிருஷ்ணாவின் பாட்டு இடம் பெற்றது. இவர் வித்வான் P.S. நாராயணஸ்வாமியிடம் முறையாக இசை பயின்றவர். தற்சமயம் அவரின் பெரியப்பா வயலின் மேதை வி.வி. சுப்ரமணியத்திடம் பயின்று வருகிறார். வயலின் வித்வான் V.V. ரவி அவர்களின் புதல்வன். சொல்ல வேண்டுமோ நல்ல இசைப்பாரம்பரியத்தில் வளர்ந்து வருபவர். இசை நிகழ்ச்சியில் முதலில் இடம் பெற்றது வர்ணம் - ராகம் - வரமு இயற்றியவர் V.V. சுப்ரமணியம். வர்ணத்தின் தொடக்கம் இன்னிசையாழ் என்ற வரி. எத்துணை சிறப்பென்றால் ராகம், ஸ்வரக்கோர்வைகள் ஒன்றுக்கொன்று பிணைத்து காதுகளுக்கு விருந்தாகவும், இலக்கணமாகவும் அமைந்தது. அதிலேயே கச்சேரி களைகட்டிவிட்டது.
ராகவகிருஷ்ணாவுக்கு இயற்கையிலேயே நல்ல குரல்வளம், தேர்ச்சி பெற்ற ஞானம் பொருந்தி உள்ளது. ராஜபாட்டையாக - ராமா நீ சமானமெவரு - கரஹரப்பிரியா தியாகராஜ கீர்த்தனை நிதானத்துடன் சுவைத்துப் பாடினார். பிறகு நீ வேரா குலதினமு - பேகடா ராக கீர்த்தனை மிச்ர சாப்புவில் இடம் பெற்றது. பேகடா ராகத்திற்கு சபாஷ் போடலாம். நீண்டகரகோஷம் அவருக்கு அங்கீகாரம் செய்தது. பின்பு கீர்த்தனையை பங்கீடாக பாடினார். ஸ்வரக்கோர்வைகள் கலை கலையாக இருந்தது. பலே! வயலின் அனுசரணையாக வாசித்தார். திருச்சேரை R. கார்த்திக். மிருதங்கம் வாசித்த கிஷோர் ரமேஷ் ரொம்பவும் போஷித்து வாசித்தார்.இடம் பெற்ற தருணம் கான வித்வான் கானக்குயில்மணி அவர்கள் ஞாபகப்படுத்தினார். பிறகு விசாரித்ததில் அவர் மிருதங்க வித்வான் R. ரமேஷ் அவர்களின் மகன் எனத் தெரிந்தது. நல்ல எதிர்காலம் உள்ளது.
ராகவகிருஷ்ணா இளம் குழந்தை பருவத்திலேயே பல நிகழ்ச்சிகளில் பாடி பல பரிசுகளை தட்டிச்சென்றவர். குறிப்பாக, சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் வந்த போட்டியில் பங்கேற்று முதல் பரிசு வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று இளம் கலைஞர்களும் சேர்ந்து அளித்த நிகழ்ச்சி இசை பிரியர்களுக்கு விருந்தாக அமைந்தது. பலே ராகவகிருஷ்ணா ப்ரகாசமான எதிர்காலம் உன் கையில் உள்ளது. சிறந்த அனிமேட்டர் ஆக பணிபுரிந்து வருவதுடன் குரல் வளம், பாடும் திறன் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதால் அவரின் இசைப்பயணம் மேல் மேலும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஆனந்த நர்தன கணபதி-நாட்டை, துளஸீதள-மாயாமாளவகௌள, கருணை தெய்வமே என் பாடல் எல்லாமே இனிமையாகப் பாடினார். சிறப்பாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X