Transactions between Kalaignar TV, DB group not genuine: ED | கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி தந்தவை போலி நிறுவனங்கள்' Dinamalar
பதிவு செய்த நாள் :
கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி தந்தவை போலி நிறுவனங்கள்

புதுடில்லி: 'தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம் கைமாறிய விவகாரத்தில் உண்மை தன்மை இல்லை' என, அமலாக்க இயக்ககம் கூறியுள்ளது.

 கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி தந்தவை போலி நிறுவனங்கள்'

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விவாதங்கள், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி முன் நடந்து வருகின்றன.

அமலாக்க இயக்ககம் தொடர்ந்த, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நேற்று வாதிட்டதாவது:
தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம்,

சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிறுவனங்கள், உண்மையான வர்த்தக பரிவர்த்தனைகளில் ஈடுபடவில்லை. 200 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்யும் நோக்கில், போலியாக இந்த நிறுவனங்கள் துவக்கப்பட்டு உள்ளன.

இந்த விவகாரத்தில், இரு நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும், போலியாக ஜோடிக்கப்பட்டவை. குஸேகான் நிறுவனம், விவசாயம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபடுவதாக கூறிக் கொள்கிறது. அப்படி இருக்கையில், 'டிவி' நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதுபற்றி, அந்த நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.ஒரு நிறுவனத்துக்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் தரும் பட்சத்தில், பணத்தை திருப்பி பெறுவதற்கு தக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறுஆனந்த் குரோவர் வாதிட்டார். அவரின் வாதம் இன்றும் தொடர உள்ளது.

பணம் கைமாறியது எப்படி:

தி.மு.க.,வை சேர்ந்த ஏ.ராஜா, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி

Advertisement

அரசில், தொலை தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக, டி.பி., குழுமம், போலியான நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலமாக, தி.மு.க., நடத்தும் கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாயை அளித்ததாக, அமலாக்க இயக்ககம் குற்றம் சாட்டியுள்ளது. இம்மோசடிக்கான திட்டம், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், ஏ.ராஜா மற்றும், 16 பேரால் வகுக்கப்பட்டதாகவும், அமலாக்க இயக்ககம் கூறுகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், ஜாமினில் வெளியே உள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ootai Vaayan - Kovai,இந்தியா
08-ஜன-201600:28:12 IST Report Abuse

Ootai Vaayanகுஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம் கலைஞர் குடும்பத்திடம் கொலை கொலையா வாழைபழம் வாங்கியது. அதற்க்கு குஸேகான் 200 கோடி கொடுத்தது. குஸேகான் கலைஞர் வாழைபழம் வழ வழா கொழ கொழன்னு இருக்கு வேண்டாம்ன்னு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு வாழபழதையும் தின்னு முடித்துவிட்டது.. இத போய் பெரிய ஊழன்னு சொல்றாங்களே..

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
07-ஜன-201618:48:29 IST Report Abuse

Tamilnesan என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை. தொடை நடுங்குது. கண்கள் கட்டுது. பல் கிட்டுது. அய்யகோ தமிழா இது வடக்கத்திகாரனின் திட்டமிட்ட சதி. இது தமிழுக்கு ஏற்பட்ட ஆபத்து. பச்சை தமிழனுக்கு ஏற்பட்ட ஆபத்து. உடன்பிறப்பே இதற்காக பஸ்ஸை எரிக்காதே. அரசு அலுவலகங்களை சூரையாடாதே. டயர்களை கொளுத்தாதே. இது தாய் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஆபத்து. ஹிஹி. இவ்வாறு நாளை அறிக்கை வெளி வரும்.

Rate this:
murumaha - madurai,இந்தியா
07-ஜன-201615:43:14 IST Report Abuse

murumahaஇதில் இருந்து தப்பிக்க ஒரே வழி தான் உள்ளது. யார் கொடுத்தா தெரியலே? அதனாலேயே நாங்க வச்சுகிட்டோம். அப்பறம் ஆடிடர் கண்டுபிடிச்சார் திருப்பி கொடுத்தோம். ஒரு பைசா செலவு பன்னல. சிதம்பரம், இளங்கோவன், சோனியா, ராகுல், மன்மோஹன் எல்லாதுக்கும் தெரியும், எனக்கு, என் மனைவிக்கு, என் மகளுக்கு, ராஜாவுக்கு, ஸ்டாலினுக்கு, அழகிரிக்கு, என் குடும்பப்தாருக்கு யாருக்கும் அது தெரியாது. வேணும்னா காங்கிர்ச்காரன கேட்டு பாரு என்று கலைஞர் சொன்னால் இந்த கேஸ் முடிய 50 வருடம் ஆகும்.

Rate this:
மேலும் 106 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X