அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜல்லிக்கட்டுக்கு யாரால் அனுமதி
தி.மு.க., - அ.தி.மு.க., 'மல்லுக்கட்டு'

'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்தது நாங்கள் தான்' என, மக்களிடம் பறைச்சாற்றும் தீவிரத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் களம் இறங்கி உள்ளன.

 ஜல்லிக்கட்டுக்கு யாரால் அனுமதி தி.மு.க., - அ.தி.மு.க., 'மல்லுக்கட்டு'


'இந்தாண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்; அதற்கான அவசர சட்டத்தை இயற்ற வேண்டும்' என, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.அதற்கான முயற்சியில் இறங்கிய மத்திய அமைச்சர் பொன்.ராதா


கிருஷ்ணன், மத்திய வனத் துறை அமைச்சகம் மூலம், வன விலங்குகளைக் காட்சிப் படுத்தும் பட்டியலில் இருந்து, காளைகளுக்கு விலக்கு அளிக்கும் அறிவிக்கையை வெளியிட வைத்து, ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இருந்தபோதும், 'இந்த அனுமதியை பெற்றுத் தந்தது ஜெயலலிதா தான்' என, அ.தி.மு.க.,வினரும்; 'கருணாநிதி தான்' என, தி.மு.க.,வினரும் கூறி வருகின்றனர்.

இதை மக்களிடமும் எடுத்து செல்ல முயற்சிக்கும் அவர்கள், இதற்காக, பாராட்டு விழா நடத்தவும் முயற்சித்து வருகின்றனர்.மேலும், சென்னை மாநகராட்சி, 131வது வார்டு, அ.தி.மு.க.,
கவுன்சிலர் குணசேகரன், பொங்கல் விழாவை, கே.கே.நகர் சிவன் பூங்காவில் நடத்துகிறார்.

அப்போது, இந்த விழாவில் ஏழு அமைச்சர்களை கலந்து கொள்ள வைத்து, 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்த ஜெயலலிதாவுக்கு பாராட்டு' என,

Advertisement

.அவர்களை பேச ஏற்பாடு செய்துள்ளார்

தி.மு.க., சார்பில், சென்னை, ராயப்பேட்டையில், பொங்கல் விழா கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த விழாவில், 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தந்தவர் கருணாநிதி' என, அவர், 'புகழ்பாட, 3 கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.இந்த விழாவில், கருணாநிதியை பங்கேற்க வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-ஜன-201616:08:39 IST Report Abuse

Pasupathi Subbianபிஜேபி அரசுக்கு ஒருத்தர் கடிதம் போட்டார், ஒருத்தர் கூட்டம் போட்டார். தானாக கனிந்த கனி. விதைத்தது யாரும் இல்லை. இவர்களின் வழக்கமே புறம்போக்கை வளைப்பதுதான் . பதவியில் இருக்கும் வரை அவருக்கும் வேலை இவருக்கு வேலையே இல்லை. பதவி போனபின் அதுக்கு ஒரு ஆர்பாட்டம் இதற்க்கு ஒரு ஆர்ப்பாட்டம். மக்கள் முட்டாள்கள் என்ற நம்பிக்கை இருவருக்குமே உண்டு. தமிழக மக்களை குடிகாரர்களாகவும், பிச்சைகாரர்களாகவும் செய்த மாபெரும் சாதனை இந்த இரு கழகத்துக்கும் உண்டு

Rate this:
bairava - madurai,இந்தியா
11-ஜன-201614:59:54 IST Report Abuse

bairava நீங்கள் யாருடா ? தமிழனின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மீட்டு எடுக்க , இது தமிழினத்தின் போராட்ட வெற்றியடா ? தமிழினது ரோகிகளா...ஜல்லிக்கட்டிற்கு தடை கோரி மனு கொடுத்து தடை ஆணை பெற்றபோது ..கருணா ஆட்சி , அதன் விசாரணை தீர்ப்பு வந்தபோது ஜெயா ஆட்சி ..அப்போ என்ன .....? பண்ணிட்டு இருந்தீங்க சொல்லுங்க .....? .....நீங்க ...எல்லாம் .....யாரு ....?யாரு ?.......யாரு ?.......சொல்லுங்க ....சொல்லுங்க ... ..சொல்லுங்க/.....?என்ன பண்ணிட்டு இருந்தீங்க.....( இது பாட்சா வசனம் ) ... உங்களுக்கே ..வெட்கமா இல்லை ..? இது தமிழனையும் திருக்குறளையும் அறிந்த படித்த ...மோடி க்கு தான் சொந்தம் ...இது மாறி எத்தனை பேரு ...எத்தனை ..காலத்துக்கு ...தமிழன் ஏமாத்த கெளம்பிருகீங்க?...இது ..மோடியின் ..தமிழ் பொங்கல் ......

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஜன-201612:34:15 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇவர்கள் யாரும் காரணம் இல்லை.... ஜல்லிக்கட்டின் மீதுள்ள மோகத்தால் குரல்கொடுத்த தமிழக மக்களும்.... சமீபத்தில் வரவிருக்கும் தேர்தலுமே காரணம் ஆகும்..

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X