அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என பா.ஜ., திட்டவட்டம்:டூவிஜயகாந்திற்காக கடைசி வரை காத்திருக்க முடிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என பா.ஜ., திட்டவட்டம்:டூவிஜயகாந்திற்காக கடைசி வரை காத்திருக்க முடிவு

''வரும் சட்டசபை தேர்தலில் எக்காரணம் கொண்டும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், விஜயகாந்த் கூட்டணிக்காக கடைசி வரை காத்திருக்கவும், அக்கட்சி முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என பா.ஜ., திட்டவட்டம்:டூவிஜயகாந்திற்காக கடைசி வரை காத்திருக்க முடிவு


பா.ஜ., சார்பில், சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வது குறித்து, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதர் ராவ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா, தேசிய செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

52லட்சம் பேர்:

கருத்தரங்கில் முரளிதர் ராவ் பேசியதாவது:தமிழகத்தில், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் மொபைல் போன்

பயன்படுத்துகின்றனர். அதில், ஒரு கோடி பேர், சென்னையில் உள்ளனர். அவர்களில், 52 லட்சம் பேர், 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். எனவே, சமூக வலைதள பிரசாரம், பா.ஜ.,வுக்கு மிகவும் முக்கியம்.தமிழக நிகழ்வுகளில், பா.ஜ., தனிக்கவனம் செலுத்துகிறது. மீனவர்கள் கைது, அவர்களை சுட்டுக் கொல்வது
போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

திருக்குறளை, நாடு தழுவிய அளவில் கொண்டாட வைத்துள்ளோம். இதை எல்லாம் இங்குள்ள திராவிட கட்சிகளால் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சி, தமிழகத்திலேயே இல்லை. அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., பேச்சு நடத்துவதாக, எஸ்.எம்.எஸ்.,மூலம் தகவல்கள் வருவதாக தெரிவிக்கின்றனர். அப்படி எந்த பேச்சும் எங்கும் நடக்கவில்லை.

இது போன்ற வதந்திகளுக்கு இடம் அளிக்காதீர்கள். இதை உங்களுக்கு அறுதியிட்டு ஏன் சொல்கிறேன் என்றால், இந்த உறுதியை நீங்கள் தான் நம்ப வேண்டும். அதற்காகவே, உங்களிடம் இதை வலியுறுத்தி சொல்கிறேன்.தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கான ஒரே மாற்று, பா.ஜ.,வே. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பவும், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், பா.ஜ.,வால் மட்டுமே முடியும்.

தலைவர் தெரியவில்லை:

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்தால், ஏன் அரசியல் மாற்றம் வேண்டும் என்பது புரியும். தமிழகத்தை ஆளும் தலைவர் தெரியவில்லை; ஆனால், பொங்கல் இலவசங்கள் கிடைக்கின்றன.


Advertisement

ஆட்சியாளரை பார்க்க முடியவில்லை; ஆனால், 'ஸ்டிக்கரை' பார்க்க முடிகிறது. தமிழக வெள்ள பாதிப்பின் போது, இங்கே ஒரு அரசு இருந்ததா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் பிரதமர் மோடி, தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில்சந்தித்தார்; அதன் பின்பும் ஆட்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வரவில்லை. தமிழகத்தில், நிர்வாகம் நடக்கிறதா என தெரியவில்லை; தேடிக் கொண்டிருக்கிறோம். பா.ஜ., ஆட்சி அமைத்தால், இது போன்ற நிர்வாகம் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

முரளிதர் ராவ் பேச்சின் படி பார்த்தால், தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைக்காது என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

பதில் இல்லை:

கூட்டத்தில் பேசிய முரளிதர் ராவ், பா.ஜ., யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற விவரத்தை கடைசி வரை தெரிவிக்கவில்லை. ஆனால், கூட்டத்தில் பங்கேற்றவர்கள், 'விஜயகாந்துடன் தான் கூட்டணியா?' என, கேள்வி எழுப்பிய போது, பதில் எதுவும் பேசாமல், சிரித்தபடி ஆமோதித்தார். இதிலிருந்தே, விஜயகாந்திற்காக, தேர்தல் நெருங்கும் வரை பா.ஜ., காத்திருக்க முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.


- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (167)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alagappan Arumugam - Singapore,சிங்கப்பூர்
16-ஜன-201605:38:33 IST Report Abuse

Alagappan Arumugamதமிழகத்தில் பா ஜ க என்பது அ தி மு க வின் ஒரு கிளை கழகம்.. பாஜக, அதிமுக ஆகியவை ஒரே துருவத்தில் செயல்படுவதாக மக்கள் பாவிக்கிறார்கள். அதிமுக வுடன் கூட்டணி இல்லையென்றால் இழப்பு அதிமுக வுக்கல்ல , பேரிழப்பு பாஜகவுக்குத்தான். அதிமுக - பாஜக கூட்டணி நாட்டுக்கு நல்லது (?) அவர்களுக்கும் நல்லது . 2016 ல் நல்லகண்ணு ஆட்சி அமைப்பார். எதிர் கட்சி தலைவராக வைகோ.

Rate this:
thiyagu - tirupur  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-201616:09:56 IST Report Abuse

thiyaguஅடுத்த ஆடசியும் அம்மா ஆட்சி தான்

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
11-ஜன-201615:39:58 IST Report Abuse

Mahendran TCஅதிமுக வுடன் கூட்டணி இல்லையென்றால் இழப்பு அதிமுக வுக்கல்ல , பேரிழப்பு பாஜக வுக்குத்தான் .

Rate this:
மேலும் 164 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X